கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Friday, June 27, 2014

கொளத்தூர் புலிக்குத்தி நடுகல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு வடக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புலிக்குத்தி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நடுகல்லின் உயரம் மூன்றடி ஆகும் . நடுகல்லின் முன்புறம் ஒரு வீரன் புலியை குத்துவது போல் வடிக்கப்பட்டுள்ளது.வீரன் தலை மேல் கொண்டை காணப்படுகிறது. கைகளிலும் கால்களிலும் காப்புகள் காணப்படுகின்றன . வீரன் புலியின் வயிற்றில் ஈட்டியை குத்துவதை போல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. நடுகல்லின் பின்புறம் கல்வெட்டு காணப்படுகிறது. அதன் செய்தி பின்வருமாறு:
“மன்மத வருசம் மாசி மாசம் பதிமூன்று குளத்தூர் தெண் வேட்டுவரில் கங்காண்டார் கல்”
இதன் மூலம் இறந்த வீரனின் பெயர் கங்காண்டார் என்றும், வேட்டுவர் இனத்தை சேர்ந்த தெண் வேட்டுவர் குலத்தை சார்ந்தவன் என்பதும் தெரிகிறது. இந்த கல்வெட்டில் எந்த ஒரு மன்னரின் பெயரும் இல்லை . ஆனால் எழுத்துகளின் வடிவத்தை வைத்து இதன் காலம் 15 ஆம் நூற்றாண்டு என்று கூறலாம். 15 ஆம் நூற்றாண்டில் இரு முறை (1415 & 1475) மன்மத வருஷம் வருகிறது. எனவே இந்த கல்வெட்டு வெட்டப்பட்ட ஆண்டு இந்த இரண்டு ஆண்டுகளில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் குளத்தூர் என்றே வருகிறது.எனவே இந்த ஊரின் பெயர் குறைந்தது 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது உறுதியாகிறது.
பொதுவாக கொங்கு பகுதியில் வேட்டுவர் தொடர்பான பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன . இதுவரை 200 க்கும் மேற்பட்ட வேட்டுவர் குலங்கள் கண்டறியப்பட்டுள்ளன [1]. அவைகளில் தெண் வேட்டுவர் என்ற குலம்
குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த கல்வெட்டின் மூலம் தெண் வேட்டுவர் என்ற குலம் முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ளது .
சத்தியமங்கலம் பகுதியில் இதுவரை கண்டறியப்பட்ட நடுகற்கள் , மலைக்கிராமங்களான கடம்பூர், காடகநல்லி, அத்தியூர் ஆகிய இடங்களில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன [2] . சமவெளி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் நடுகல் இதுவே ஆகும். ஏனைய மலைபகுதி நடுகற்கள் சதி கற்களாகவும் காணப்படுகின்றன (சதிக்கல்லில் வீரனின் சிற்பத்தோடு மனைவியின் சிற்பமும் சேர்ந்து வடிக்கப்பட்டிருக்கும்). கர்நாடகத்தில் சதி கற்கள் மிக அதிக அளவில் காணப்படுகிறது [2]. இந்த மலைபகுதிகள் கர்நாடக எல்லையில் அமைந்துள்ளதால் சதி பண்பாட்டையும் சேர்த்து கொண்டுள்ளன. ஆனால் கொளத்தூர் நடுகல் சதி பண்பாடு இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கொங்கு பகுதியில் நடுகற்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டாலும் கல்வெட்டுடன் கிடைக்கும் நடுகற்கள், ஈரட்டிமலை, செலக்கரிச்சல், பழமங்கலம், துக்காச்சி, கன்னிவாடி போன்ற இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன [3]. இந்த நிலையில், கல்வெட்டுடன் கூடிய கொளத்தூர் நடுகல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
அடிக்குறிப்புகள:
[1] புலவர் செ. இராசு,”வேட்டுவர் சமூக ஆவணங்கள்”, கண்ணப்பர் அறக்கட்டளை.
[2] K. Rajan, “South Indian Memorial Stones”, Manoo Pathippagam, Thanjavur, 2000.
[3] கி. அ. புவனேஸ்வரி, “கொங்கு சோழர்”, புவியரசு பதிப்பகம், கோவை

நாமக்கல்லில் சோழர்கால கல்வெட்டு

கீழ்க்கரை நாட்டு மேல்சேரியைச் சேர்ந்த வேட்டுவன் ஊராளிப் பிள்ளையரான இருங்கோளன், மலையிலுள்ள வேதநாயகப் பெருமாளுக்கும் கீழுள்ள சிங்கப்பெருமாளுக்கும் வேட்டம்பாடியிலிருந்த தம்முடைய குளக்கீழ் நீர்நிலத்தில் ஒரு மா அளவு நிலத்தைத் திருமடைப்பள்ளிப்புறமாகக் கொடையளித்தத் தகவலைத் தருகிறது.
குடைவரை முகப்பின் தெற்குச் சுவர் விரிவில் உள்ள கல்வெட்டு, மன்னரின் இருபத்தோராம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. ஊராளிமலை வேட்டுவரான கோயான் இருங்கோளன் கரியபெருமாளான வலங்கைமீகாமன் அவருடைய ஊரான சேந்தமங்கலத்தில் இருந்த குளக்கழனி நிலத்தில் மாகாணி அளவு நிலத்தை இரண்டு குடைவரை இறைத்திருமேனிகளின் படையல் செலவினங்களுக்காக அளித்த தகவல் இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.
இரண்டு கல்வெட்டுகளிலுமே ஊராளி மலை வேட்டுவர் என்று இருங்கோளரைக் கூறியுள்ளனர் .

வெள்ளாள பெண்களை பொட்டு கட்டி விட்ட செப்பேடு

பெருங்குடி செப்பேடு,தூரன் குல செப்பேடு,பொட்டு கட்டி விட்ட செப்பேடு இந்த செப்பேடுகல் கொங்கு வெள்ளாளர் வெள்ளாள பெண்களை பொட்டு கட்டி விட்டதை பற்றி கூறுகிறது.

பொட்டு கட்டி விடும் என்னும் தேவதாசி முறை 1947 ஆம் ஆண்டு சட்டம் இயற்றி இந்த
முறையை ஒழித்தார்கள்.கொங்கு நாட்டில் தேவரடியாள் குறித்து பல கல்வெட்டுகள்
இருக்கிறது.கொங்கு வெள்ளலரில் தொண்டன் பிரிவை சேர்ந்தவர்கள் மாற்று சாதிக்கு பிறந்தவர்கள் என்று தெனிந்திய குளங்களும் குடிகளும் கூறுகிறது.கொங்கு நாட்டில்
உழவு தொழில் செய்வதற்காக சோழ நாட்டில் இருந்த வெள்ளலரை அடிமையாக
கூட்டி வந்தது வேட்டுவ குல மன்னர்கள்தான் .வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில்
குடியேறுகிற போது குலங்கள் கிடையாது .குடியேறுகிற போது குலங்கள் பிரித்து விட்டு சாட்சி கையெழுத்து போட்டவர் வேட்டுவர் என்ற செய்தி கொங்கு காணியான
பட்டயம் கூறுகிறது .கி பி 10ஆம் நூற்றாண்டுகளில் இந்த குடியேற்றம்
நடக்கிறது .யிப்படி வரலாறுகளை வைத்துகொண்டு போலி ஆவணங்களை உருவாக்கி கொண்டு ஆண்ட பரம்பரை என்று மக்களை ஏமாற்றுகிறார்கள

ஆடி 18 கொல்லிமலை காவலன் விழா






வெள்ளாளர் என்போர் யார் ?

கொங்கு நாட்டில் உழவு தொழில் செய்வதற்காக சோழ நாட்டில் இருந்த வெள்ளாளரை அடிமையாக கூட்டி வந்தது வேட்டுவ குல மன்னர்கள்தான் .வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடியேறுகிற போது குலங்கள் கிடையாது .குடியேறுகிற போது குலங்கள்
பிரித்து விட்டு சாட்சி கையெழுத்து போட்டவர் வேட்டுவர் என்ற செய்தி கொங்கு காணியான பட்டயம் கூறுகிறது .கி பி 10ஆம் நூற்றாண்டுகளில் இந்த குடியேற்றம்
நடக்கிறது .பிறகு வெள்ளாளர்கள் பெண்ணும் பொன்னும் வேட்டுவ போர்
மறவர்களுக்கு கொடுத்து நிலத்தை சொந்தமாக்கி கொண்டார்கள் .இதனால்தான்
வேட்டுவனின் வீரம் வெள்ளளாச்சி மார்பு நுனியில் இருக்கிறது என்று சொல்
வழக்கு கொங்கு நாட்டில் இருக்கிறது .சில கோயில்கள் வேட்டுவற்கும் ,வெள்ளலற்கும்
குல தெய்வமாக இருக்கிறது.அந்த கோவில்களை கட்டியவர்கள் வேட்டுவர்கலே பெண்களை வேட்டுவ மன்னர்களின் அந்தபுரதுகு கொடுத்து பெற்று கொண்டவர்கள்
தான் இந்த வெள்ளாளர்கள் .