கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Thursday, July 4, 2013

வேட்டுவ மாமன்னன் வல்வில் ஓரி


வேட்டுவ மாமன்னன் வல்வில் ஓரி

சில சகோதரர்கள் வேட்டுவ மாமன்னன் வல்வில் ஓரியை தவறான வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து தங்கள் மன்னன் என்று உரிமை கொண்டாடுகின்றனர்..அவர்கள் வைக்கும் வாதம் இதுதான் ..மழவராயர் என்ற பெயர் அவர்களுக்கு உள்ளதாம்..ஆதலால் வல்வில் ஓரியை நாங்கள் உரிமை கொண்டாடுகின்றோம் என்றனர்..என் வாதங்களையும் ஆதாரத்தையும் பதிவிடுகிறேன்...
நீங்கள் கூறும் ஆதாரம் எல்லாம் நிகழ்கால ஆசிரியர்களால் எழுதப்பட்டது... சங்க இலக்கியம் புறநானூறில் ஓரி வேட்டுவர் ( ஈங்கு ஓர் வேட்டுவர் இல்லை, நின் ஒப் போர்)என்று தெளிவாக கூறுகிறது..ஓரியை மட்டுமில்லாமல் கோடை மலைத் தலைவன் கடிய நெடு வேட்டுவன், கண்டீரக் கோப்பெரு நள்ளி(இவன் புறநானூறில் வல்வில் வேட்டுவன் என்று போற்றப்படுகிறான்) போன்றவர்கள் நேரடியாகவே புறநானூறில் வேட்டுவர் போற்றப்படுகின்றனர்....

1.சங்ககால மழவர்கள் வேட்டுவரின் இன குழுக்கள்.. ஆனால் நீங்கள் கூறும் மழவராயர் என்ற பட்டம் கி.பி 10-ம் நூற்றாண்டுக்கு பிறகு சோழ மன்னர்களால் வழங்கப்பட்டது. மழவராயர் என்ற பட்டம் வன்னியர்களுக்கும் மட்டுமில்லாமல் உடையார் மற்றும் கள்ளர்சமுதாயத்திற்கும் உண்டு என்பதை நினைவில் கொள்ளவும்..பட்டப்பெயர் தான் பல சமுதாயத்திற்கு இருக்கும்.. இனப்பெயர் ஒரு சமூகத்துக்கு மட்டும் தான்..
2.வேட்டுவ மன்னன் அல்லாளன் இளையநாயக்கர் வேட்டுவர்களை தனது செப்பேட்டில் கொல்லிமலைக்கு தலைவரே, கொல்லிமலைக்கு உரியோரே என்று குறிப்பிடுகிறார்..இங்கு வேட்டுவரின் உட்பிரிவான மழவர்கள் அங்கு வாழ்ந்ததால் தான் அவர் அவ்வாறு குறிப்பிடுகிறார்..இங்கு கவனிக்கப்பட வேண்டியது நாயக்கர் என்பது பட்டப்பெயர்தானே தவிர இனப்பெயர் அல்ல ..ஆதலால் நாம் மதுரை திருமலை நாயக்கர் மன்னரை உரிமை கொள்ளமுடியாது... சோழன் பூர்வ பட்டயம் கி.பி 9-ம் நூற்றாண்டில் சோழ மன்னர் கொங்கு நாட்டில் ராஜா வேடர்களை வென்று கொங்கு நாட்டை கைப்பற்றினார் என்று கூறுகிறது..கொல்லிமலையும் கொங்கு நாட்டின் ஒரு பகுதிதான்..ஆதலால் தான் இங்கு மழவர்களை குறிப்பிடாமல் அவர்களின் பிறப்பு ஜாதியான வேட்டுவர்களை வென்றோம் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது....
ஆதலால் வரலாற்றை திரித்து தவறான வரலாறை உருவாக்க வேண்டாம் வன்னிய சகோதரர்களே... நீங்கள் பிறரது வரலாற்றை பயன்படுத்தாமல் சகோதரத்துவமாக வாழுங்கள்.. நாங்கள் உங்களை என்றென்றும் வாழ்த்துவோம்.....




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.