கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Friday, January 10, 2014

குறிஞ்சிநிலத் தலைவன் வேட்டுவன்


தமிழனின் வரலாற்றுப்படி குறிஞ்சிநிலத் தலைவன் வேட்டுவன்.


இலக்கியங்களில் வேட்டுவர்களை பற்றி சில .

1.வெம் மறவர் குலத்து வந்த வேட்டுவர் சாதியர் - பெரிய புராணம் -756.
கொடும் செயல் மிக்க மறவர் குலத்தில் வந்தவர்கள் என்று கூறுகிறது.
2.வீரத்தில் ஓர் வேட்டுவன் - தேவாரம் .
3.வேட்டுவர் உருவில் இறைவனைக்கானலாம்-பாட்டுக்கோர் பாரதி.
4.மூரிவார் சிலை மாவழியர்-மணிமேகலை.
5.கொற்றவை கொண்ட அணிக்கொண்டு நின்றவி பொற்றொடி மாதர் தவமென்னை கொல்லோ பொற்றொடி மாதர் பிறந்த குடிபிறந்த வில்தொழில் வேடர் குலனே குலம் - சிலப்பதிகாரம் வேட்டுவ வரி. . 
6.கரும்புறத்தாருக் கெல்லாம் அரசன் மாவலியன் - காளமேகப்புலவர்.
7.வில்விழா எடுக்க என்று விளம்பினான் வேடர் கோமான்-பெரிய புராணம்.
8.மாவலி மருமாள் சீர்கெடி திருமகள் சீர்த்திஎன்னுந் திருத்தறு தேவியோடு - மணிமேகலை .இங்கு மாவிலி மகளாகக் சீர்த்தி சொல்லப்படுகிறாள்.சீர்த்தி சோழப் அரச மாதேவி ஆவார்.
9.மாந்தரன் பதிகம் ஓலை சுவடி - 
நிலந்த்தருசீர்ப் பெருங்கீர்த்தி நிலைமைபெற்று பாண்டியனின் குலம் பெருக வந்துதித்த கோவேந்தர் ஐம்பிரிவர் பூவழியர்,மாவிலியர் பொற்புமிகும் காவலியர் சேவகமே மிகும் சேவக்க மிகும் வேடர் செம்மை மிகும் வெட்டுவார்கள் பன்றிமலை மண்டலத்து பாகொழுகும் மது நாட்டில் வெற்றிதரு விலாடபுரி மேவியமாந்தரசு புரியும் காவலராய் கொங்கரெனும்.இப்பாடல் பாண்டியனின் புத்திரவர்க்கமாக வேட்டுவர்களை கூறுகிறது. 
10.வேட்டுவர்கள் பகைபுலத்துக்கு காவலாக இருந்தனர்,தனியாட்சி நடத்தினர் என்று முல்லைப்பாட்டு கூறுகிறது - முல்லைப்பாட்டு (வரி -26-28) 
கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற் சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி வேட்டுப்புழை யருப்ப மாட்டிக் காட்ட விடுமுட் புரிசை யேமுற வளைஇப் படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி.

சில கல்வெட்டுகள்.
1.கி.மு 300 வத்தலகுண்டு -அந்துவ வேட்டுவன் என்ற பெயர் பொறித்த நடுகல். 
2.கி.மு 400 கொடுமணம் -வேட்டுவர் பெயர் பொறித்த கணையாழிகள். 
3.அந்தியூர் செல்லீஸ்வரர் கோவில் பாசறை - வேட்டுவன் கொங்கன்.
4.சோழன் பூர்வ பட்டயம் - ஆதித்ய சோழன் இராஜ வேடர்களை வென்று கொங்கு நாட்டை கைப்பற்றினான் என்று உள்ளது.
தென்னிலை செப்பேடு - வேட்டுவர்கள் வேளாண் காடை குலத்துக்கு ராசா கோவிலில் முப்பத்து உரிமையை கொடுத்தது.
5.திருமுருகன் பூண்டி முருகநாதர் கோவில் - ஊராண்மை பொலுவ வேட்டுவன் கல்வெட்டு. 
6.ஒட்டியர் மற்றும் சல்லியர்களை தோற்கடித்து குடிகளை காத்தனர் என்று வேட்டுவ பாளையக்காரர் வரலாறு கூறுகிறது.
7.கருவூர் அய்யர்மலை கல்வெட்டு "படித்துறை வேடன் அதிட்டனம்"கி.பி 1 ம் நூற்றாண்டு.
8.வேட்டுவன் ஏழுநூற்றவன் வேனாட்டிலுள்ள வாழையூரில் இருந்த வாழையூர் அடிகளுக்கு மங்கள்பாடி என்ற ஊரை தானமாக வழங்கினான்.
9.நந்திவர்மன் பல்லவன் உதய்யெந்திரன் செப்பேடு சுலோகம் (58) உதயணன் என்ற வேதா அரசனைப்பற்றி கூறுகிறது.

குருகுலவம்சம்.
1.மானூர்பாளையம் செப்புபட்டயம் வேட்டுவர்களை குருகுல வம்சம் என்றும் வணராயக் கவுண்டர் ஆட்சி செய்ததையும் கூறுகிறது.
2.கொடுமணல் கணபதி பாளையம் செல்லாண்டி அம்மன் கோவில் கல்வெட்டு-வேட்டுவர்கள் குருகுல வம்சத்தவர்கள் என்று கூறுகிறது. 

கவுண்டர் பட்டம்.
கி.பி 8 பூரிவந் சாந்தப்படை கண்டர்களில் சாந்தப்பிள்ளான் சங்காழ்வான்,வடகரைநாட்டு பாட்டில் ஊராளியும் நடுவில் நிட்தய கண்டர் வேட்டுவர்,காமுண்டன் மணிய வேட்டுவன்.இதில் கண்டர் என்பது தான் காமிண்டன் என்ற பெயருக்கு முற்ப்பட்டது..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.