கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Monday, November 3, 2014

வேட்டுவ கவுண்டர் தொடர்பானவை

செய்யான் பல்லவராயன்
தொல்லுல கத்தினிற் றுட்டரை வெட்டித் துணித்த ததனாற்
சொல்லிய போசள வீர புசபலன் சூளசீர்
பல்லவ ராய னெனப்பட்ட மீயப்படை செலுத்த 
வல்லவன் வேட்டுவச் செய்யானும் வாழ் கொங்கு மண்டலமே.
(க-ரை)   போஜள வீர புஜபலனென்னும் அரசனது சேனையைச் செலுத்தி, அவனது பகைவனை வென்றபடியால் "பல்லவராயன்" என்று பட்டங் கொடுக்கப்பெற்ற வேட்டுவச் செய்யானுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
வரலாறு :-    மேல்கரைப் பூந்துறை நாட்டைச் சார்ந்த அறைச் சலூரில் கரைய வேட்டுவரில் செய்யான் என்பவன் ஓய்சல வீரவல்லாள வேந்தனிடத்தில் சேனா வீரனாக இருந்தான். அவனது யுத்த தந்திரத்தை நன்கு மதித்து அந்த அரசன் பல்லவராயன் என்று பட்டப்பெயர் கொடுத்தான். தன்பெயருடன் செய்யான்பல்லவராயன்  என்று புகழுடன் வாழ்ந்தான். இவன்மீது சில பிரபந்தங்களும் 
இருக்கின்றன. இவனது சாசனம் அறச்சலூர் புற்றிடங் கொண்ட நாயனார் 
ஆலயத்தின் தென்புறச் சுவரில் இருக்கிறது .. ஸ்வஸ்திஸ்ரீ போஜளவீர 
புஜ் பல * வீரவல்லால தேவர் பிரதிவி ராஜ்ஜிய பரிபாலனம் .மேல்கரைப் பூந்துறை நாட்டு அறச்சலூர் கரையவேட்டுவரில் செய்யான் பல்லவராயனே இவ்வூரில் உடையார் புற்றிடங் கொண்ட நாயனார் கோயிலில் திருக்கட்டளையில் திருநிலைக் காலும் செய்வித்தேன் ..... இச்சாசனமிருக்கிறது.


அல்லாளன் இளையான்
வடமுக நின்று வருகா விரியின் வனத்தை யென்றுந் 
திடமுறு கொங்கினும் பாசன மாகச் செலப்பிரித்த 
அடல்கொ ளல்லாள னிளையான் பெருக்க மமைத்துவளர் 
வடகரை யாற்றூர் திகழ்வது வுங்கொங்கு மண்டலமே.


(க-ரை) வடதிசையினின்று வந்த காவிரி நீரைக் கொங்கு நாட்டினும் பாசனமாகும்படி வாய்க்காலாகப் பிரித்த வல்லாள இளையான் வாழ்கின்ற வடகரை ஆற்றூருங் கொங்கு மண்டலம் என்பதாம்.


வரலாறு :- கொங்கு இருபத்து நான்கு நாட்டினுள்ளே கீழ்கரை அரைய நாட்டில் வடகரை ஆற்றூரிலே வேட்டுவரில் இம் முடித்திருமலை அல்லாள இளைய நாயக்கன் என ஒரு தக்கோன் இருந்தான் அவன் திருச்செங்கோடு ஸ்ரீநாகேசுரர், அர்த்தமண்டபம் மஹாமண்டபம் முதலிய திருப்பணிகள் செய்தான். கோயிற்கற்பணி வேலை மிகச் சிறந்தது எனலாம். மைசூர்ப் பெருங்கலக்காரனும், கொள்ளைக்காரனுமான நஞ்சய உடையார் அர்த்தநாரீசுரர் ஆலயத்திற்கொள்ளை அடித்துக்கொண்டு போனான்; 
என்றாலும் ஆறைஇளையா நாயக்கன் பலத்த சேனையுடன் சென்று அவர்களை வழிமறித்துக் கொள்ளைப் பொருள்ளைப் பிடுங்கிக் கொண்டு வந்து சேர்த்தான். அழிந்தவற்றிற்குத் தன்னுடையதாகப் பல உதவினான். சாலிவாக சகாப்தம் 1565 தாரண ஐப்பசிமாதம் 25 தேதி (கி. பி. 1643) நாகேசுரர் கோயிலில் சம்புரோக்ஷணஞ் செய்வித்திருக்கிறான். காவிரியின் வடபுரம் அணையின்றி வாய்க்கால் பிரித்துப் பாசன வசதி செய்திருக்கிறான். இவ்வாய்க்காலை ராஜ வாய்க்காலென வழங்குகிறார்கள். முற்காலத்தில் ராஜ ராஜன் ஆட்சியில் வெட்ட ஆரம்பித்திருக்கலாம் என்று சிலர் 
எண்ணுகிறார்கள். இவன் மரபினருக்கு இவ்வாய்க்காலில் மரியாதை உண்டு
என்பதன்றிக் கபிலைமலை முதலிய தேவஸ்தானமுள்ள கீழ்கரை அரைய 
நாட்டிலெல்லாம் முதன்மை இருக்கிறது.

(மேற்)
மூவருக்கு மகத்தியமா முனிவருக்கு மரசிருந்த முன்னை யோர்க்குந் தேவருக்குந் திரும்பாத காவிரியைக் கொங்கேற்றித் திறை கொண்டாயே பூவிருக்கு முரமாயன் கடலடைத்தா னவன்வேடன் புனைந் தவாறோ யாவருக்கு மிளையானே யல்லாள திருமலையா வீகையோனேதிருச்செங் - திருப் - மாலை 262 செய்யுள் முதல் 268 வது செய்யுள் வரை நோக்குக. கபிலை மலைக்குழந்தைக் குமாரர் வருக்கக்கோவை 77-வது 
செய்யுளில் இவன் புகழப்படுகிறான். இந்நூல் கலி 4740-ல் (கி. பி. 1640) அரங்கேற்றப் பெற்றது. சென்னை (சாசன பரிசோதக) ஆர்க்கலாஜிகல் 1907 - 1908 வருஷாந்த ரிபோர்ட்டு 2-வது பிரிவு 16-வது பக்கத்து இவன் குறிப்பு இருக்கிறது.


கோபண மன்றாடி
தென் பாண்டி நாட்டினிற் சிங்களர் தீமை செயச் செழியன்
முன்போ யகற்ற வலியற்ற காலத்தின் மொய்ம் பொடவர்
பின்போடத் தானை கொடுமோட்டு வீரன் பெருங் களந்தை 
மன்பூ வலனெனுங் கோப்பண னுங்கொங்கு மண்டலமே
(க-ரை) பாண்டி மண்டலத்திற் சிங்களர் புகுந்து வருத்துதலைத்
தடுக்கப் பாண்டியனுக்கு இயலாத காலத்தில், வலிய சேனையை நடத்தி
அச்சிங்களர் திரும்பி யோடச் செய்தவனுங் களந்தையென்னும் பதிக்குத்
தலைவனும், பூவலனென்னும் குடிப் பிறப்பனனுமான கோப்பணன்
என்பானுங் கொங்கு மண்டலம் என்பதாம்.

வரலாறு :- பாண்டி மண்டலத்தின் ஆளுகையைப் பற்றிப் பராக்கிரம பாண்டியனுக்குங் குலசேகர பாண்டியனுக்குஞ் சண்டை நேர்ந்தது. மனைவி மக்களுடன் பராக்கிரம பாண்டியனைக் குலசேகரன் நாசஞ் செய்துவிட்டான். இதனைக் கேள்வியுற்ற சிங்களத்தரசனான பராக்கிரம பாகு என்பான் தன் தண்ட நாயகனான இலங்காபுரியைப் பலத்த சைனியத்துடனனுப்பினான். அந்த இலங்காபுரி என்பான் இராமேசுவரத்தைப் பிடித்துக்கொண்டு சிலபாகத்தையும் அழித்து குந்துகாலம் என்னும் இடத்தில் ஒரு 
கோட்டைகட்டி பராக்கிரமபுரம் எனப் பெயரிட்டான். இவர்களை எதிர்த்த பாண்டியராஜன் - சுந்தரபாண்டியனெனும் இருபாண்டியர் களிறந்தார்கள். அப்பொழுது ராஜகேசரி ராஜாதிராஜன் கொங்கு நாட்டை ஆண்டிருந்தான். இவன் குலசேகர பாண்டியனுக்கு மாமன்முறை ஆகவேண்டும். இதனால் இந்தச்சோழனைக் குல சேகரபாண்டியன் துணை வேண்டியனான். உடனே கொங்கப் படையைத் திரட்டி அனுப்பப்பட்டது. இதுசென்று திருக்கானப் பேர் - தொண்டி - பாசி - பொன்னமராவதி - மணமேற்குடி - மஞ்சக்குடி 
என்னும் இடங்களிலெதிர்த்துச் சிங்களப் படைகளைப் பாண்டி நாட்டை விட்டுத் துரத்திவிட்டது. இந்தக் கொங்குப் படைக்குச் சேனாதிபதியாகச் சென்ற சேனாபதிகளுள் ஒருவனாக இக்கோப்பணன் சென்றதை இச்செய்யுள் விளங்குகிறது. 1898 சென்னை ஆர்க்கலாஜிகல் வருஷாந்த ரிபோர்ட்டிலும் காஞ்புரத்துக்கடுத்த ஆரம்பாக்கத்து  கோயிற் சாசனத்திலும் இப்படையெடுப்பு எழுதப்பட்டுள்ளது.

இந்த சண்டை கி.பி. 1190-ல் நடந்ததெனச் சாசன பரிசோதகர்கள் கணிக்கிறார்கள். எனவே இன்றைக்கு 730 வருஷங்களாகின்றன. இவன் மரபினர் பேரூர், அவிநாசியிலும் திருப்பணி செய்திருக்கிறார்கள்.இம்மரபினர் கோயமுத்தூர் ஜில்லாவில் புரவிபாளயம் (பாளயப் பட்டு) ஜமீன்தாராக இருக்கின்றனர். இவர்களைப் பாண்டிய ராஜாங்கத்தார் 

புத்திரவர்க்கமெனக் கொண்டு பல உரிமைகள் செய்திருக்கிறார்கள்.விஜயநகரம், மஹிசூர், மதுரை நாயக்கர் சமஸ்தானம், மலையாள சமஸ்தானங்களிலும் பல கவுரவங்கள் பெற்றிருக்கிறார்கள். கள்ளிக்கோட்டை ஆமீன் சாய்புக்குஞ், சீரங்கபட்டணம் நபாபுக்கும் நடந்த வாளையாற்றுச் சண்டையில் வழி மறிக்கப்பட்டது. அக்காலத்திற் புதியவழியை வெட்டிக் காட்டியதால் சந்தோஷப்பட்ட நபாபு உம்பளமாகச் சில கிராமங்கள் உதவினான்.

இம்முடி - மன்றாடி என்பன முதலிய பழய காலத்துப் பட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள். 'இம்முடி' ஜகமண்டலாதிபதி கோப்பண மன்றாடியார் என்பது இப்பொழுதுள்ளவர் பெயர்.

களந்தை = வாரக்க நாட்டிலுள்ள ஓரூர்.
பூவலர் = பூவலியர் - ஒரு ஜாதி. பூலுவரென்பாரு முளர் இவர்கள் 

குருகுருப்பிரிவினுள் பூவலியர் - மாவலியர் - காவலியர் - வேட்டுவர் 
வேடர் எனும் பஞ்சவருண வாளரச வகுப்பினர் என்பர்.


காட்டை விற்று கள் குடித்தாலும் 
கவுண்டன் கவுண்டன் தான்.

இது நமக்காகவே உருவாக்க்கப்பட்ட பழமொழி என்பதற்கான ஆதாரம் இதோ....
ஓங்கியல் யானை தூங்குதுயி லெய்த
வாகை தும்பை வடதிசைச் சூடிய
வேக யானையின் வழியோ நீங்கெனத்
திறத்திறம் பகர்ந்து சேணோங் கிதணத்துக்
குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்

அமை விளை தேறல் மாந்திய கானவன் - மூங்கிலின் கண் விளைந்த கள்ளையுண்ட வேட்டுவன், கவண்விடு புடையூஉக் காவல் கைவிட - கவண்கற்களை விடுத்துப் புடைக்கின்ற காவலினைக் கைவிடுதலால், வீங்குபுனம் உணீஇய வேண்டி வந்த - பெரிய தினைப்புனத்தில் உண்ணுதலை விரும்பிவந்த, ஓங்கியல் யானை தூங்குதுயில் எய்த - உயர்ந்த இயல்புடைய யானை அயர்ந்து உறக்கமடைய, வாகை தும்பை வடதிசைச் சூடிய - வாகையையும் தும்பையையும் வடநாட்டின் கண் முடித்த, வேக யானையின் வழியோ நீங்கென - விரைந்த செலவினையுடைய யானை வரும்வழியிற் செல்வாய் இவ்விடம்விட்டு நீங்குவாய் என்று, திறத்திறம் பகர்ந்து சேண் ஓங்கு இதணத்துக் குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்-அரசனுடைய வெற்றித் திறங்களைத் திறப்பண்ணினாற் கூறிச் சேணிலே உயர்ந்த பரணின்மீ திருந்து குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாடலையும் ;

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.