கொங்கு வெள்ளாளர்கள் :
முல்லை நிலமாதலால், காடும், காடும் சார்ந்த நிலங்களாக கொங்கு காட்சியளித்தது. இங்கு வாழ்ந்த இனக் குழுக்கள், வேடர், ஆயர் மற்றும் எயினர் ஆகும். வேடர்கள் வேட்டைத் தொழிலையும் ஆயர்கள் கால் நடைவளர்த்தல், தினை, வரகு, அவரை, துவரை முதலிய பயிர்களை பயிரிடல் (விண்ணோக்கிய வேளாண்முறை) என்ற முறையில் பொருளாதார வாழ்க்கை இருந்தது. இவர்களுக்குள் கூட்டப்பிரிவுகள் இருந்தன. தாம் வாழும் முறை மற்றும் இடங்களுக்கேற்ப கூட்டப்பெயர்கள் நிலைத்து இருந்தன. திருமணத்திற்கான ஒழுக்க முறை கூட்டங்களிடையே வரையறை செய்யப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் மருத நிலப்பகுதிகளில் இனக்குழு சிதைவடைந்த நிலையில், கொங்கில் மட்டும் சிதையாமல் 12ஆம் நூற்றாண்டு வரையில் நீடித்தது. அது மட்டுமல்ல புறம்போக்கு நிலங்கள் ஏராளமாகவும் இருந்தன.
13ஆம் நூற்றாண்டில் சோழ, பாண்டிய அரசுகளின் பொருளாதார தேவை கூடியது. நெல் அதிக உபரியை வழங்கும் தானியம் என்பதால், நெல்விளையும் நிலங்களிலும் முல்லை மற்றும் குறிஞ்சி நிலங்களிலும் பயிரிட முயற்சி எடுத்தனர். எனவே, பிரமதேயம் மற்றும் கோயில்கட்டி அதற்கான நிலங்களை உருவாக்க முனைந்தது. கொங்கு நாடு அதற்கு வசதியாக இருந்தது. இந்நிலத்தில் அமராவதி, நொய்யல், பவானி போன்ற ஆறுகளும், சண்முகநதி, பாலாறு, பெருந்தலாறு போன்ற சிறிய நதிகளும் ஓடிக்கொண்டிருந்தது. பல்வேறு கூட்டப்பெயர்களுடன் வேட்டுவர்களும், ஆயர்களும் இனக்குழுவாக வாழ்ந்து வந்தனர். வேட்டுவர்கள் வேட்டைத் தொழிலும், ஆயர்கள் கால்நடை வளர்ப்பும், தானியம் பயிரிடல் என்ற அளவில் பொருளாதார வாழ்வு இருந்தது. “ஆ கெழு கொங்கர்’’ “கொங்கர் ஆ பரந்தன்ன’’ என சங்க இலக்கியம் இவர்களைப் பதிவு செய்துள்ளது.
கொங்கு தவிர்த்த இதரப்பகுதிகளில் வேளாண் தொழில் செய்வோரை, பாண்டிய வேளாளர், சோழிய வேளாளர் என அழைக்கப்பட்டு வந்தனர். இங்கு வேளாளர் என யாரும் இல்லை. எனவே, தஞ்சை தொண்டைமண்டலம் (புதுக்கோட்டை) ஆகிய பகுதிகளில் இருந்து வேளாளர்கள் கொங்கில் குடியேறினர் (நிக்கல்சன் 1887:86) இதையே, ”சோழன் பூர்வபட்டயம்’’, “அண்ணமார்கதை’’, “கொங்கு வேளாளர் புராணம்’’, ஆகியன உறுதிப்படுத்துகிறது. ((குறிப்பு : கொங்கு வெள்ளாளர்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டின் போதுதான் கொங்கு நிலத்திற்கு வருகிறார்கள் . ஆனால் பத்தாம் நூற்றாண்டிலேயே காமிண்டன் அல்லது கௌண்டர் என்னும் பட்டம் வன்னியர்கள் பெற்று அதை வழக்கத்திலும் கொண்டு வந்துவிட்டார்கள்))
குடியேறிய வேளாளர்கள் கொங்கிலுள்ள ஆயர்களுடன் ரத்தக்கலப்பு ஏற்பட்டு வேளாளர் என்ற புதியப் பெயரைத் தாங்கி நின்றனர். இவர்கள் குடியேறிய பின்பே, நீர்பாசனமுறை கொங்கு நாட்டில் உருவானது. குடியேறிய வேளாளர்கள் ஏற்கெனவே ஆயர்களிடம் உள்ள கூட்டம் (குலம்) முறையை ஏற்றுக்கொண்டனர். ஆயர்கள் அவர்களிடம் வேளாண் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டனர். இதன் பிறகே கல்வெட்டுகளில் வேளாளர் என்று பொறிக்கப்பட்டுள்ளது என அறிகிறோம். வேளாளர் என்ற சொல்லுக்கு வெள்ளத்தை ஆள்பவர் என்ற பொருள் உண்டு.
மருத நிலப்பகுதியில் இருந்த வேளாளர்கள் தமது சாதிப்பெயரை பிள்ளை என மாற்றிக்கொண்டது போல் கொங்கு வேளாளர்கள் தங்கள் பெயரை கவுண்டர் என மாற்றிக்கொண்டனர். இது தங்களை மேல்நிலையாக்கம் செய்வதற்கான நடவடிக்கையாகும். ஆதாரம் : காலிங்கராயன் கால்வாய் பற்றிய கட்டுரை (http://www.keetru.com/ index.php?option=com_content&vi ew=article&id=303%3A2009-08-27 -02-40-33&catid=911%3A09&Itemi d=154)
கொங்கு வெள்ளாளர்கள் அண்மைய காலத்தில்தான் கவுண்டர் பட்டத்தை பயன்ப்படுத்தி வருகின்றனர் என்று கொங்கு வெள்ளாளர்
சமூகத்தை சேர்ந்த முனைவர் .திரு .சு .ராஜவேலு அவர்கள் “தொல்லியல் சுடர்கள் ” என்ற நூலில் “கல்வெட்டுகளில் கொங்கு வெள்ளாளர் கூட்டுப் பெயர்கள் ” என்ற கட்டுரையில் (பக்கம் 176) கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.
“கூட்டுபெயர்கள் வரும் கல்வெட்டுகளில் கொங்கு என்ற இக்கால முன்னொட்டு காணப்படவில்லை . எனவே கொங்கு என்ற நிலவியல் சொல் பிற்காலத்தில் முன்னொட்டாக வந்துள்ளது என்பது தெளிவாக விளங்கும் . இதே போன்று கொங்கு வெள்ளாளக் கௌண்டர்களின் பின் ஒத்தான ‘கவுண்டர் ’ என்ற பட்டமும் ல்கல்வெட்டில் மிகக் குறைவாகவே காணப்படுகிறது என்று திரு .சு .ராஜவேலு அவர்கள் எழுதியுள்ளார் .
3. ”1871 தொடங்கி 1931 வரை நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் இவர்கள் எதிலும் கொங்கு வெள்ளாளர் என்று கணக்கெடுக்க படவில்லை .. இதனை எட்கர் தர்ஸ்டன் என்பவர் "தென் இந்திய சாதியினர் மற்றும் பழங்குடியினர் " என்னும் புத்தகத்தில் கொங்க என்ற தலைப்பில் எழுதபெற்ற வசனம் இங்கே :
KONGA-konga are kongu is a territorial term, meaning inhabitant of the territorial country.It is recent times of census, been returned as a division of a large number of classes mostly tamils which include – Ambattan, Kaiolan, Kammalan,Kuravan,Kusavan,Malay an,Odde,Parayan, upparaand vellala.It is used as a term of abuse among the Badagas of the Nilgiri hills. Yhose for example, who made mistakes in matching kolmgrens…were seornfully called konga by the onlookers.
Similarly in parts of Tamil country a tall , lean and stupid individual is called a kongan.They seem to have little in common with other vellalas,except the name, and appear to hold a lower position in society for reddis will not eat with them. They will dine with thotiyans and others of lower non bhramins castes.
Their devellings are generally Thatched huts.
4. இதனால் அதுபோல இவர்கள் தனி சாதி என்ற அந்தஸ்து அடைய முடியாத நிலையே தொடர்ந்தது .. அப்போது வட தமிழகத்தில் வன்னியர்கள் கௌண்டர் என்ற பட்டதுடன் இருப்பதை கண்டு , அதை தங்கள் பெயருடன் சேர்த்து போட்டு தனி சாதியாக அடையாளம் பெற்றனர் .
INDIAN COMMUNITIES என்ற புத்தகத்தில் கே.எஸ்.சிங் என்பவர் பின்வருமாறு எழுதியிருக்கிறார் .
“KONGU VELLALA/ KONGU VELLALA GOUNDER”
This is a community of tamilnadu who shares some common features with other vellala excepts the name.
They are distributed in Kongu nadu comprising the adjoining districts of tamilnadu and kerala.
IN TAMILNADU THEY ARE REFERRED TO AS KONGU VELLALAR, BUT AFFIX GOUNDAR AS S HONORIFIC TITLE BORROWED FROM THE PEOPLE OF THE NORTHERN DISTRICTS OF TAMILNADU.
In kerala, the kongu vellala goundar is called kongu vellala drive the name from their original place of habitants.
============================== ============================
முடிவுரை :
==========
கௌண்டர் பட்டம்
வன்னியர் குல க்ஷத்ரியர்:
கல்வெட்டு படி பட்டம் கிடைத்த காலம் - பத்தாம் நூற்றாண்டு - சோழ மன்னரால் கொடுக்க பட்டது
தமிழக சாதி பட்டியலில் அழைக்கப்படும் முறை - கௌண்டர்
கௌண்டர் பட்டதுடன் அழைக்கப்படும் பகுதிகள் - தமிழ்நாடு முழுதும் கொங்கு நிலத்தையும் சேர்த்து கௌண்டர் பட்டம் கொண்டுள்ளனர்
கொங்கு வெள்ளாளர்
கல்வெட்டு படி பட்டம் கிடைத்த காலம் - 13 ஆம் நூற்றாண்டில்தான் வெள்ளாளர்கள் கொங்கு நிலத்திற்கு வருகின்றனர் .அதன் பின்தான் வெள்ளாளர்கள் கொங்கு வெள்ளாளர் என்றே மாற்றம் செய்தனர் . அதன் பிறகு வெள்ளைக்காரன் காலத்தில் நடந்த சாதி வாரி கணக்கெடுப்பு வரை அந்த பட்டம் இல்லை .பின்பு மேல்நிலையாக்கம் செய்வதற்காக கௌண்டர் பட்டம் சேர்த்து கொண்டனர்
தமிழக சாதி பட்டியலில் அழைக்கப்படும் முறை - கொங்கு வெள்ளாள கௌண்டர்
கௌண்டர் பட்டதுடன் அழைக்கப்படும் பகுதிகள் - கொங்கு நிலம்
தமிழ்நாடு சாதி பட்டியலிலும் வெறும் கௌண்டர் என்பது வன்னியர்களை மட்டுமே குறிக்கிறது:
Vanniakula Kshatriya ( including Vanniyar, Vanniya, Vannia Gounder, Gounder or Kander, Padayachi, Palli and Agnikula Kshatriya )
ஆனால் கொங்கு வெள்ளலர்களுக்கோ கொங்கு வெள்ளாளர் என்றுதான் உள்ளதே தவிர, வெறும் கௌண்டர் என்று இல்லை . அதோடு ஏதாவது ஒரு பெயர் ஒட்டிதான் வருகிறது . அது அவர்களின் கூட்டத்தை குறிப்பது போல . வெறும் கௌண்டர் என்னும் பட்டம் வருவதில்லை
Kongu Vellalars( including Vellala Gounder, Nattu Gounder, Narambukkatti Gounder, Tirumudi Vellalar, Thondu Vellalar, Pala Gounder, Poosari, Gounder, Anuppa Vellala Gounder, Kurumba Gounder, Padaithalai Gounder, Chendalai Gounder, Pavalankatti Vellala Gounder, Pallavellala GounderSanku,Vellala Gounder,and Rathinagiri Gounder).
காமிண்டன் அல்லது கௌண்டர் என்னும் பட்டம் பத்தாம் நூற்றாண்டிலேயே வன்னியர் குல க்ஷத்ரியர்க்கு கிடைத்துள்ளது . ஆனால் 13ஆம் நூற்றாண்டில்தான் வெள்ளாளர்கள் கொங்கு நாட்டுக்கு வந்து கொங்கு வெள்ளாளர் என்றே பெயரே பெற்றனர் .அதோடு அங்கு உள்ள ஆயர்களுடன் சேர்ந்து அவர்கள் உட்ப்பிரிவு பெயர்களையும் இவர்களும் சேர்த்து கொண்டனர் . இதனால் கௌண்டர் என்னும் பட்டம் இவர்கள் பயன் படுத்துவதற்கு பல நூற்றாண்டிற்கு முன்பிலுருந்தே வன்னியர் குல க்ஷத்ரியர் சாதியே பயன்ப்படுத்தி வருகிறது என்பது தெளிவாகிறது . பள்ளி காமிண்டன் என்னும் பட்டம் போல கொங்கு வெள்ளாள காமிண்டன் என்ற பட்டம் எப்போது யாரால் தரப்பட்டது என்று தேடினால் கிடைக்கப்பெற்ற மாட்டாது . காரணம் அது பின்னாளில் கொங்கு வெள்ளாளர்கள் தங்களை மேல்நிலையாக்கம் செய்வதற்காக கௌண்டர் பட்டம் சேர்த்து கொண்ட நடவடிக்கையாகும்.
This Article Taken from the following link
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.