கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Thursday, November 14, 2013

துரோகத்தின் விளைநிலம் வெள்ளாளர்


தமிழக சாதி பேதங்கள் – சில வரலாற்று உண்மைகள் வெள்ளாளர் பற்றி

இதற்கு கொஞ்சம் சரித்திரம் பார்ப்போம். கி. பி. 1070-களில் இருந்து தொண்டைமண்டலத்தில் தெலுங்கு சோழர்கள் ஆதிக்கத்தில் வந்துள்ளது. யார் இந்த தெலுங்கு சோழர்கள்? கி.பி.1070 ஆதிராஜேந்திரன் என்ற சோழர் குல தமிழ் வம்சாவளி அரசியல் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட பிறகு, தெலுங்கு சோழர்கள் எனப்படும் குலோதுங்க சோழர்கள் ஆட்சி ஆரம்பமானது. ராஜராஜ சோழனின் மகள் குந்தவி நாச்சியார் ,வேங்கி நாட்டு அரசனுக்கு திருமணம் செய்து கொடுத்து அந்த வம்சாவளியில் வந்தவர்கள் தங்களை தெலுங்கு சோழர்கள் என்பார்கள். பிற்கால சோழப் பேரரசு மத்திய இந்தியாவில் குறிப்பாக வேங்கி ,சாளுக்கியம்,கங்கம் ( தற்போதைய கர்நாடகம்,அதாவது மைசூர்க்கு வடக்கே, ஹுப்லி, ஹம்பி, பேலுர்.(பேலுர் கோயில்,சோழத் தளபதியை வென்றதற்கு நினைவாக கட்டப்பட்டது.) என தனது பேரரசை விரிவுப்படுதியது. இவர்களது அரசியல் போர்கள் அனைத்தும் மத்திய கர்நாடகம், ஆந்திரம் காக்கிநாடா, இங்குதான் நடந்து வந்துள்ளது ,அவர்களது குல எதிரிகளான சாளுக்கியர்களிடமே இப்போர்கள் நடந்துளது. தற்போது கர்நாடகத்தில் உள்ள ஹம்பி விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகராக இருந்துள்ளது.

ராஜராஜ சோழன் மிகச்சிறந்த சோழப் பேரரசனாக இருக்கலாம் ,ஆனால் அவன் தன் இனம் அழியக் காரணமானவன் என்பதும் வரலாற்று உண்மை. முதலில் களப்பிரர்கள் அந்நியர்கள் இல்லை, அவர்களும் தமிழ் குடியே, என்பது அண்மைக்கால வரலாற்று, சமூகவியல் ஆராய்சியாளர்களின் கருத்து. சமணமே அவர்களது மதம். மிகச்சிறந்த நல்லொழுக்க நூல்கள் அவர்களது காலத்தில்தான் ஏற்பட்டது. திருக்குறள் மிகச்சிறந்த சான்று.மதம் என்றுமே அரசியலில் மிகப் முக்கிய பங்கு வகிக்கும். சைவம் வளர சமணம் அழிக்கப்பட்டது. அத்துடன் களப்பிரர்களும் அந்நியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இளங்கோவடிகளும் ,திருத்தக்க தேவரும் மிகச் சிறந்த புத்த சமண பேரறிஞர்கள். பிரமணத்தை எதிர்த்து வந்ததே சமணமும், புத்த மதமும், பிற்கால சோழர்கள் காலத்தில் அரசு மற்றும் அரசியல் ஆதரவு பெற்ற வெள்ளாளர்கள், பிரமணர்கள் முற்றிலுமாக சமண, புத்த மதங்களையும், அவர்களது ஆதரவு அரசுகளையும் அழித்தனர்.

அதியமான் நாடான தர்மபுரி,கிருஷ்ணகிரி, வல்வில் ஓரி நாடான கொல்லிமலை,சேலம் நாமக்கல், பாரி நாடான வட,தென் ஆற்காடு மாவட்டங்கள், பிரான்மலை,புதுக்கோட்டை,கோவில்பட்டி,கழுகுமலை மேற்கு தொடர்ச்சி மலை,கரூர் என்று பண்டைய குறுநில அரசுகள் அனைத்தும் சமணத்தையே ஆதரித்து வந்துள்ளது என்பதற்கு பல்வேறு குகைக் கோயில்கள், கல்வெட்டுகள் இலக்கியச் சான்றுகள் எனப் பல உள்ளன. எனவே களப்பிரர்கள் வெளியில் இருந்து வந்து சமணத்தைப் பரப்பினார்கள் என்பது ஏற்புடையதாக இல்லை.. மேலும் களப்பிரர்களின் தலை நகரான செந்தலை தற்போதைய திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சைக்கு நடுவில், தமிழகத்தின் நடு மத்தியில் உள்ளது. செந்தலை கல்வெட்டில் அவர்களை கள்வர் காவலன். என்று அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களது கல்வெட்டுகள் அனைத்தும் தமிழ் வட்டெழுத்துகளாகவே உள்ளது. அந்நியர்களான பல்லவர்களை முன்னேற விடாமல் தடுத்து நிறுதியவர்கள் களப்பிரர்களே. பல்லவர்கள் தாய்வழி மற்றும் திருமணங்கள், கங்கர்கள் என்கிற தற்போதைய கன்னடர்களுடனே இருந்துள்ளது. இரண்டாம் நந்திவர்மன் தனது ஆட்சியை நிலைப் படுத்திகொள்ள தமிழகத்தின் தொண்டைமண்டல போர் மரபினர்களான, குறுநிலமன்னர்களுக்கு அதிக அரசியல் முக்கியத்துவம் கொடுத்து வந்தான். எனினும் இக்குறுநில மன்னர்கள் பல்லவர்களை முழு அதிகாரத்துடன் ஆள விடவில்லை தங்களது தமிழின அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு இருந்தார்கள். பல்லவர்களின் அரசியல் போர்க்களம் பெரும்பாலும் தமிழகத்தின் வடக்கேதான் இருந்துள்ளது.

களப்பிரர்கள் கண்டிப்பான ஒழுக்க கட்டுப்பாட்டினை நடைமுறைப் படுதினார்கள். இதுவும் அவர்களது வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருந்தது. அதுமட்டுமல்ல தொன்மையான தமிழ் குடிகள் மத ரீதியாக செயல்பட்டதில்லை. குறிஞ்சிக்கு சேயோனும்,முல்லைக்கு மாயோன்,மருததிற்கு இந்திரன் ,நெய்தலுக்கு வருணன்,பாலைக்கு கொற்றவை.என ஐந்திணை அடிப்படையில்தான் இறைவழிபாடு. இருந்துள்ளது.அதேபோல இந்திரனை முக்கியமான தெய்வமாக வழிப்பட்டனர். இந்திரா விழாவாக மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இதன் வெளிப்பாடுதான் இன்றைய சித்திரை திருவிழாவாக இருக்கும். பெருவுடையார் கோயிலில் கூட பிரம்மா, சரஸ்வதி, விஷ்ணு வரிசையில் இந்திரனும் இருக்கிறார். முக்குலதோர்கள் இன்றும் தங்களை இந்திர குலத்தவர்கள் என்றே குறிப்பிடுகிறார்கள். எந்த காலகட்டத்தில், இந்திரனைப் பற்றி இழிவான பூரணக்கதை புனையப்பட்டது என்பது ஆராய்ச்சிக்கு உரியது. அதுமட்டுமல்ல போர்க் கடவுளான இந்திரன்,பிற்பாடு வழிப்பாட்டுக்கு ஏற்றவனாக இல்லாமல் போனது ஏன் என்றும் சந்தேகம் வருகிறது. முக்குலத்தவ்ரின் மூலவன் இந்திரன் என்றும் அவன் வழி தோன்றல்கள் இழிவானவர்கள் என்று புராண புனைக்கதைகளிச் செய்தவர்கள் யாராக இருக்கும்? ( சில நேரம் தோன்றும் தமிழர்கள் ஏன் மறுடியும் இந்திரா விழாவினைத் தொடங்கக் கூடாது? ஒருவேளை அப்படிக் கொண்டாடினால் நமக்கு பழைய வீரமும் வாழ்வும் வருமோ? இதைதாத்தான் revival and renaissance of culture என்பார்கள்.)

இதில் மற்றொரு நிகழ்வையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இன்றைக்கும் கள்ளநாடுகளில் குலசாமி வழிப்பாட்டில் கோடங்கி மேல் சாமி இறங்கும்போது எங்கு இருந்து வந்தாய் என்றால் வடக்கிலிருந்து வந்தேன் ,என்றும் எதற்கு வந்தாய் என்றால் காராள வெள்ளாளனை கருவருக்க வந்தேன் என்று சொல்வார்கள் அதன் பின்னரே வந்திருப்பது குலசாமி என்று முடிவு செய்வார்கள். இது வழி வழியாக வருவது. பெரியவர் வேங்கடசாமி நாட்டார் அவர்களும் கள்ளர்கள் தொண்டைமண்டலத்தில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இந்தக் கூற்று பெரும்பான்மையான ஆராய்சியாளார்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

விஜயநகர இளவல் குமரா கம்பண்ணன் தமிழகத்திற்குள் வரும்போது அவரது மனைவி கங்காதேவி மிகச் சிறந்த கவியரசி தனது குமார விஜயம் என்ற நூலில் தமிழகம் வரும்போது வழியெங்கும் மிகப்பெரிய அரச குடும்பங்கள், உயர்ந்த குடும்பங்கள் குழந்தைகள் உட்பட கொலை செய்யப்பட்டு அவர்கள் உடல்கள் அவர்களது வீடுகளில் எங்கும் கிடந்தன என்கிறார். மாலிக்கபூர் வரும்வழியில் உள்ள ஊர்களை அழித்து வந்தான் என்றாலும்,அவனது சிறுபடைக்கு அத்தனை உயர் குடும்பங்களையும் அழிக்க முடியுமா? அதுவும் உள்நாட்டில் உள்ள அதிகார குடும்பங்களை எப்படி கண்டு பிடித்து வீடு புகுந்து எப்படி அழித்திருப்பான்?

மற்றுமொரு நிகழ்வு, விஸ்வநாத நாயக்கர் மதுரைக்கு ஆட்சி செய்ய வரும்போது அவருக்கு உதவியாக வந்தவர், அரியநாத முதலி, காஞ்சிபுரம் அருகில் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த ஏழை வெள்ளாள வகுப்பினர். இவர் காஞ்சியிலிருந்து விஜயநகரத்திற்குச் சென்று அங்கு அரண்மனையில் கணக்கராக இருந்துள்ளார். தமிழகத்தில், பாளயங்கள் அமைத்தது அரியநாத முதலிதான்.

ஏற்கனவே தொண்டைமண்டல வெள்ளாளர்களுக்கு தெலுங்குஅரசர்கள் தொடர்பு இருந்துள்ளது என்பது தெரிகிறது. அதுமட்டுமல்ல சித்திரமேலி பெரியநாடு பற்றி படிக்கும்போது அதன் நிர்வாகிகள் தமிழில் மட்டுமல்லாது வடமொழிகளிலும் ஆழ்ந்த திறமைப் பெற்றவர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். உயர் கல்விஞானம் கொண்ட வெள்ளாளர்கள் அன்னியர்களுடன் சுலபமாக பழகும் வழக்கம் இயல்பாகவே வந்திருக்கும். இதன் காரணமாக தெலுங்கு சோழர்கள் காலத்திலிருந்தே முக்குலதோரின் அரசியல் அதிகாரங்களை கைப்பற்ற வெள்ளார்கள் முயன்று இருக்க வேண்டும்.

தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அனுராதபுரம் வரை விரிந்து இருந்த தமிழ் சமுதாயம் குறுகியது நாயக்கர்கள் கால கட்டத்தில்தான்.அதாவது வெள்ளாளர்கள் அரசாங்க அதிகாரத்தில் நுழைந்த போதுதான். சிங்களவர்களுக்கும், பாண்டிய அரச வம்ஸத்திற்கும் காலம் காலமாக திருமண உறவு இருந்துள்ளது. பாண்டிய வம்சம் சீர்குலைந்த பிறகு, தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உள்ள உறவுகள் பல்வேறு காரணங்கள் காரணமாக பிளவு ஏற்பட்டது. அதில் மதம் முக்கிய பங்கு வகிக்கிறது.

பிற்கால சோழர்கள் தங்களுடைய ஆட்சிக்குட்பட்ட பிற நாடுகளில் வேளிர் படை, அகம்படியர் படை இவர்களை பாதுகாப்பிற்காகவும், வெள்ளாளர்களை விவசாயத்திற்காகவும், நிர்வாகத்திற்காகவும் அமர்த்தியுள்ளார்கள். அதனால்தான் முக்குலதோரில் கள்ளர் ,மறவரை விட , அகம்படியர் மைசூர், வாராங்கல், முதல் இலங்கை வரை இருந்துள்ளனர். அகம்படியர்கள் தஞ்சையில் தேவர்கள் என்றும் பிள்ளை என்றும் அழைக்கப் படுவார்கள். தென்பாண்டி மண்டலத்தில், தேவர் என்றும், சேர்வை என்றும் அழைக்கப்படுவார்கள்., தொண்டைமண்டலதில் , முதலியார்கள், நாயக்கர்கள் என்றும் அழைக்கபடுவார்கள். அதாவது அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் பிள்ளை, சேர்வை,முதலியார்கள் என்றும், போர் மற்றும் இராணுவத்தில், காவல் கடமையில் இருப்பவர்கள் தேவர்கள், நாயக்கர்கள் என்று அழைக்கப் படுவார்கள். நாயக்கர்கள் போர் மற்றும், காவல் தொழிலில் ஈடுபடுபவர்கள் அதனால்தான் தொண்டை மண்டலத்தில் அகம்படியர் நாயக்கர், வன்னிய நாயக்கர்கள் இருக்கிறார்கள்.( ஒரு அன்பர் அகம்படியர் ஆனால் நாயக்கர் என்ற பட்டம் உள்ளது என்றார். இதைப் படித்தால் தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.)

பிற்கால சோழர்களின் காலத்திற்குப் பிறகுதான் தொன்மையான தமிழ் பழங்குடி போர்மர்பினர் ,குறுநில மன்னர்கள் அழிக்கப் பட்டனர். உதாரணத்திற்கு, அதியமான், மலையமான்,சம்புவரையர், முத்தரையர், இவர்கள் மட்டுமல்ல எயினர், வேட்டுவர் என்று பல மலைவாழ் பழங்குடியினரும் காணாமல் போனார்கள். மேலும் பிற்கால சோழர்கள் ஒரு குடையின் கீழ் தங்களது ஆட்சியைக் கொண்டு வர குறுநில மன்னர்களை ஒடுக்கினார்கள்.

காவேரியின் நீர்வளத்தை முழுமையாக பயன்படுத்த நினைத்ததால் காடுகளை அழித்து அதனை விவசாய பூமியாக மாற்றினார்கள். இதனால் பிற்கால சோழர்கள் காலத்தில் உழவர்களான வெள்ளாளர்கள் அதிகாரம் பெற்றனர். மேலும் வெள்ளாளர்கள் ஆதீனங்கள் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு கல்வி ,கேள்விகளில் சிறந்து இருந்தனர். பேரரசுகள் மறைந்த பிறகு அதுவாரை அரசு நிர்வாகத்தில் இருந்த போர்மரபினர்கள் மெல்ல மெல்ல தங்கள் அதிகாரத்தை இழக்க,,வெள்ளாளர்கள் அரசு அதிகாரங்களை கைப்பற்றி தங்களை சத்- சூத்திரர்கள் என்றழைத்துக் கொண்டனர். இந்த நிலை 18ஆம் நூற்றாண்டுவரை இருந்து வந்துள்ளது என்பதை Edgur Thurston, ‘Caste and Tribes in South India’.என்ற நூலில் அறியலாம். மேலும் வெள்ளாளர்கள் தங்களை துளுவ வெள்ளார்கள் என்று விஜயநகரம் துளுவர்களின் ஆட்சியில் வந்த பிறகு இவ்வாறு அழைத்துக் கொண்டார்களா என்று தெரியவில்லை. கிருஷ்ண தேவராயர் துளுவ வம்சாவளியில் வந்தவர். வெள்ளாளர்கள் பிரமணியத்தைக் காப்பியடித்து தங்களை உயர் சாதியினராக காட்டிக்கொண்டனர். ஆங்கிலயர்கள் காலத்தில் அரசாங்க வேலைக்கு அதிக போட்டி பிராமணர்களுக்கும் வெள்ளாளர்களுக்கும்தான் இருந்துள்ளது.

சோழன் காந்தளூர்ச்சாலையை கைப்பற்றி 100 வருட சேர சோழ போரினை உருவாக்கி, தொன்மையான தமிழ் தேசமான சேரளத்தை ,கேரளமாக்கினான். 10ஆம் நூற்றாண்டில் கேரளம் உருவானது. தெலுங்கனுக்கு பெண்னைக் கொடுத்து, தெலுங்கர்கள் சோழ நாட்டை ஆள வழி வகுத்தான், பிரமணத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தான் சுர்திரர்களில் வெள்ளாளர்களை மட்டும் உயர்தினான். சோழனை தடுத்து நிறுத்தியது பாண்டியனே. தமிழினத்தை அன்றும்,இன்றும் என்றும் காத்து நிற்பதால் தான் இன்றும் தமிழகத்தில் எங்கும் பாண்டியனின் பெயர் பட்டி தொட்டிகளில் எல்லாம் பேர் சொல்லி நிற்கிறது. தென்பாண்டி மண்டலத்தில்தான் இன்றுவரை பிரமிண ஆதிக்கம் இல்லை, பிரமிணர்களைப் பார்த்து காப்பியடிப்பதும் இல்லை.

ஏற்கெனவே தெலுங்கு சோழர்கள் காலத்திலே தொண்டைமண்டலம் மெல்ல மெல்ல தமிழகத்தை விட்டு அந்நியர்களின் வசமானது. துலுக்கர்களால் துரத்தப்பட்ட வந்தேறிகள் தமிழக தெலுங்கர்களால் அடைக்கலம் தரப்பட்டது. தமிழகத்தின் காட்டுப் பகுதிகளையெல்லாம் ஆக்கிரமித்து பாளயங்களாக்கி தங்கள் அரசியல் அதிகாரத்தை ஊன்றிக்கொள்ள தமிழனிடம் சாதி பேதங்களை உருவாக்கினான்.விஜயநகர பேரரசு முற்றிலும் பார்ப்பன வர்ணாசிரமத்தை அடிப்படையாக கொண்டது. 11ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் எங்கும் சாதி பேதங்கள் இல்லை.

தமிழ்ச் சமுதாயம் மூன்று வகுப்பினர்களைக் கொண்டது. 1.காவலன், வணிகன், சூத்திரன். அறிவோன் எந்த வகுப்பினராகவும் எந்த தொழில் செய்பவராகவும் இருக்கலாம். அறிஞர்களை,ஆன்றோர்களை, மக்கள் நலம் காப்பவர்களை மன்னனும், மக்களும் போற்றி வணங்கினர். போர்மரபினர்கள் காவலர்களாகவும், குறுநில மன்னர்களாகவும். பேரரசர்களாகவும் இருந்து வந்துள்ளனர். இங்கு போர்மரபினர் எனப்படுபவர்கள் முக்குலத்தோர், முக்குறுவார், முத்தரையர், வேளிர், கொங்கர், மலையமான், அதியமான், எயினர், இன்னும் பலர். துலுக்கர் மற்றும் நாயக்கர்கள் வரவால் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட தொன்மையான தமிழ் குடிகள் அழிந்ததாக கூறுகின்றனர். இவர்கள் இராணுவம்,காவல் (போலீஸ்), கோட்டைக் காவல் வரிவசூல், அரச நிர்வாகம் போன்ற பொறுப்புகள் உள்ளவர்கள்.

வணிகர்கள் மிகப்பெரிய பன்னாட்டு வணிகர்களும், பெரும் வணிகர்களுமான, நானாதேசிக வணிகர்கள் என்றழைக்கப்பட்டார்கள். செட்டியார்கள் மட்டுமின்றி பரதவர்களும் செல்வாக்கு மிக்க வணிகர்களாக இருந்துள்ளனர்.

சூத்திரர்கள் தொழில் முறைகளை அறிந்த சூத்திரதாரிகள். இவர்கள் வலங்கை, இடங்கை என்ற இருபிரிவுகளால் அழைக்கப்பட்டனர். விவசாயம் அதைச் சார்ந்த தொழில்களைக் கொண்டவர்கள் வலங்கைகள். வெள்ளாளர்கள், பள்ளர்கள், உழவுத்தொழிலுக்கு கருவிகள் செய்யும் ஆசாரிகள், விவசாயப் பொருட்களால் வரும் எண்ணை, போன்றவற்றை விற்கும் வணிகர்கள் பனையேறுபவர்கள் போன்றவர்கள், இவர்கள் அரசனுக்கு வலப்புறம் அமர்வார்கள் . விவசாயத்திற்கு அப்பாற்பட்ட தொழில் செய்பவர்கள் இடங்கைகள் இடையர்கள், நெசவாளர்கள்,வண்ணார்கள், பறையர்கள் போன்றவர்கள் இவர்கள் அரசனுக்கு இடப்புறம் அமர்வார்கள். இன்னும் எண்ணற்ற தொழில்சார்ந்த தமிழினம் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு அரசவையில் அரசனுக்கு வலப்புறம், இடப்புறம் அமர்ந்து அரசாங்கத்தில் பங்கேற்று உள்ளனர்.

அதுமட்டுமல்ல மிகப்பெரிய கோவில்கள் தனிப்பட்ட collectorate ஆக சுதந்திர நிர்வாகத்தை மேற்கொண்டுள்ளது. இதுவே பின்னர் ஆதினங்களாக அழைக்கப்பட்டது. குடிமராமத்து, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மொழி வளர்ச்சி இவையெல்லாம் இவர்களது பொறுப்பானது. இந்த கோவில்கள் அல்லது ஆதீனங்கள், அவர்களுக்கென்று தனிக் காவல் படைகளை, பிரிவினரை வைத்திருப்பார்கள். பெரும்பாலும் கோவில்கள் ஆதீனங்கள் வன்னியர்களை தங்களது கோயில் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளுக்கும் வைத்திருந்தன.. குறிப்பாக தொண்டைமண்டலம் மற்றும் சோழ மண்டலம். வன்னியர்களை படையாட்சிகள் என்று அழைப்பார்கள்.வன்னியர்கள் போர்க்காலங்களில் படைகளுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் உடனுக்குடன் கவனித்ததால் இவர்களை படையாட்சிகள் என்றார்கள். கூகையூர் கல்வெட்டில் குறிப்பிடபடும் காவலர்கள் தனிப்பட்ட சிறு காவலர்கள் ( watchman) . இராணுவம், போலீஸ் வேறு. முக்குலத்தோர் எந்தவகையிலும் வலங்கை,இடங்கை பிரிவுகளில் இல்லை.

சித்திரமேலி பெரியநாடு, குறுநில அரசுகள் போர்மரபினரை பாதுகாப்பிற்காக வைத்திருந்தனர். இவைப் போன்றே நானாதேசிக வணிகமையங்கள் போர்மர்பினரை பாதுகாப்பிற்காக வைத்திருந்தனர். போர்க்காலங்களில் இந்தப் படைபிரிவுகள் பேரரசு படைகளுடன் சேர்ந்து கடல் கடந்தும் போருக்குச் செல்லும். பாண்டிய மண்டலத்தில் முக்குலத்தோரும், சேர மண்டலத்தில் நாயர்களும் இராணுவத்தையும் காவலையும் மேற்கொண்டனர். இன்றளவும் இவர்களது ஆதிக்கம் இவ்விரு மண்டலங்களில் இருந்து வந்துள்ளது. ஆனால் காலத்தின் கொடுமையால் சோழ, தொண்டைமண்டலத்தில் அகம்படியரும் வேளிரும் இன்ன பிற போர்மரபினர்கள் செல்வாக்கு இழந்து காணாமற் போய் விட்டார்கள்.

இப்படிபட்ட விவசாயத்தைச் சார்ந்த சமுதாய அமைப்புகளே சித்திரமேலி பெரியநாடு, பிரம்மதேயம், ஆதீனங்கள், வணிகமையங்கள், இவைக்களது நிர்வாகம் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடந்து வந்துள்ளது.அனைத்து வகுப்பு பிரதிநிதிகள் நிர்வாகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். (வகுப்புகள்தான் உண்டு, சாதி வேறுபாடு இல்லை.)வளமான காலங்களில் போர்க்காலங்களில் அதிக வரிகளும், பஞ்ச காலங்களில் குறைந்த வரிகளும் விதிக்கப்பட்டன. வரிகள் அந்தந்த சமுதாய அமைப்களின் கிராம, அதன் பொறுப்பில் இருக்கும் நிர்வாக வளர்ச்சிக்குமே செலவிடப்பட்டது. நீதியும் நிர்வாகமும் அந்தந்த சமுதாயத்திடமே இருந்தது.

Tamil society was more republic than autonomous. There was no caste discrimination. - that people were never associated with caste as an organization but they were integrated as caste within the society. – Burton Stein.

இதுதான் தமிழினம், இதுதான் தமிழ் சமுதாயம்.. இதைப் புரிந்துக் கொண்டால் என் இளைய தலைமுறை நமது சகோதர சாதிகளை எப்படி மதித்து வாழ வேண்டும் என்று அறிந்துக்கொள்ளும். இதைத்தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வலியுறுத்தினார். இதைதான் தலைவர் பிரபாக்கரன் நடைமுறைப் படுதினார்.

ஆனால், தமிழகத்தின் தமிழனக் காவலர்களுக்கு தமிழ் சமுதாயம் துண்டுபடாவிட்டால் எங்கே துயர் துடைக்க முடியாமல் போகுமோ என்ற ஆதங்கத்தில் சாதீயில் நம்மை முக்கி மூழ்கடிக்கிறார்கள்.

தமிழகத்தில் நடந்த முதல் சாதிக் கலவரம் எங்கு நடந்தது தெரியுமா?

பேரரசுகள் அழிந்து அவர்களின் பிரதிநிதிகளான போர்மரபினர் அழிக்கப்பட்டும், அதன் தலைமைகள் சிதறுண்டு போனபோது, வெள்ளாளர்கள் தங்களை மறைமுகமாக அதிகாரவர்க்கமாக நிலை நிறுத்திக் கொண்டார்கள். 1482-இல் தஞ்சை, திருச்சி தென்னாற்காடு அதாவது அன்றைய சோழ நாட்டில் வெள்ளாளர்கள், வன்னியர்களின் துணையுடன், நாயக்கர்களை திருப்திபடுத்தவும், தங்களை அதிகாரிகளாக நிலை நிறுத்தவும் இடங்கை,வலங்கை பிரிவில் உள்ள 96 சாதிகளின் மீது வரிவசூல் மட்டுமல்ல சாதி வேறுபாடுகளையும் கொண்டு வந்தனர்.

இறையேலி பரப்பி, பந்தரவாடி, சீவிதபரப்பு என்பதும் கோயில் நிலங்கள். இந்நிலங்கள் அடைப்பு – நீர்பட்டி என்று குத்தகையோ சேர்வையோ, நில வரிகளோ கிடையாது. இவைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு இதனை இடங்கை,வலங்கை மக்கள் அனுபவித்து வந்தார்கள். நாடிழந்த ,துரத்தப்பட்ட நாயக்கர்கள் ( நாயக்கர்கள் என்பது 13ஆம் நூற்றாண்டில் தெலுங்கர், கன்னடர்,இருவரையும் சேர்த்தது). தலைமை இல்லாத தமிழகத்தில் வெள்ளாளர்களைப் பயன்படுத்தினார்கள். தங்களைக் ஆண்டாண்டு காலம் காவல் காத்தவனைக் காட்டிக்கொடுத்து, வந்தேறிகளுக்கு வாசலை திறந்து வைத்து வெள்ளாளர்கள் ஆளா விரும்பியதால், வன்னியர்கள் தங்களை காவல்காரர்களாக உயர்திக்கொள்ள வெள்ளாளர்களுடன் இணைந்து பிற தமிழ்ச் சாதிகளை அடக்க நினைத்தார்கள். கொற்றவர்கள் மறைய, சொந்த சகோதரன் காட்டிக்கொடுக்க, பொருள் இழந்த நாயக்கனின் அநியாய வரிவசூல், தமிழகத்தில் முதல் சாதிக் கலவரம் அரங்கேர காரணமானது. இதன் பலன் 1. தமிழர்களிடம் அநியாய வரிவசூல், 2.தமிழர்கள் அனுபவித்து வந்த காணி நிலங்களைச் சூறையாடல், 3.தமிழ் சமுதாயத்தில் வேற்றுமையை உருவாக்கியது. வெள்ளாளர்களின் நாடாளும் ஆசையே தமிழினம் சிறுமைப்பட ஆரம்பித்தது.

ஒரு உண்மையை நாம் முழுமையாக புரிந்துக் கொள்ள வேண்டும். சிறு குழுவாக , மொழி தெரியாமல் வரும் வந்தேறிகள் உடனடியாக நாடு பிடிக்கவோ, நிலங்களை கைப்பற்றவோ முடியாது. உள்ளிருந்து துரோகம் செய்பவர்களாளேயே இனம் அடிமைப்படும்,வீழும்.

தென்பாண்டி மண்டலமும் பாண்டியனுமே தமிழினத்தை பல நூற்றாண்டுகளாக காத்து வருகிறார்கள். எந்தவொரு அந்நிய ஆட்சிக்கும் வட தமிழகம் என்றுமே எதிர்த்தது இல்லை என்பது ஏன் என்று யோசிக்க வேண்டும். சிறுபான்மையாக குறுநிலமாக இருந்தாலும் கொங்கு மண்டலம் மேற்கில் தங்களது உரிமைகளை காத்து நின்று வருகிறார்கள். தெலுங்கு சோழர்கள் பின்னர் நாயக்கர்கள் வந்தபோதும் தலைவாசலை வடதமிழகம் திறந்து வைத்து வந்தாரை வாழ வைத்து தன் இனத்தை காட்டிக் கொடுக்க ஆரம்பித்தது.

நாயக்கர்கள் வரவால் முற்றிலும் அழிந்தது வீரமும் தீரமும் மிக்க பரதவர் குலம். டச்சுக்காரர்கள், போர்தூகீசியர்கள் தமிழ் கடலோரப்பகுதிகளை முற்றிகையிட்டபோது எந்தவொரு எதிர் நடவடிக்கையையும் நாயக்கர்கள் ஆட்சி மேற்கொள்ளவில்லை. மதத்தின் பேரால் போர்தூகீசியர்கள் தமிழர்களின் வாழ்வில் ஊடுருவதை வன்மையாக தடுத்து நிறுத்தியவர் இராமனாதபுர மன்னர் கிழவன் சேதுபதி. அதுமட்டுமல்ல நாயக்கர்களை அதிகாரத்தை மதுரை நகரத்துடன் தடுத்தவந்ததும் சேதுபதிகளே. மதுரையை முற்றுகையிட வந்த கன்னடர்களை மைசூர் வரை விரட்டியடித்த புகழ் பெற்ற மூக்கறுப்பு போர் நிகழ்தியவர் கிழவன் சேதுபதி, மூக்கறுப்பு போரின் வெற்றிக்கு முழுக்கரணமானவர் தளபதி வயிரவன் சேர்வை அவர்கள். அவர் சேது மண்டலத்திலிருந்து படை திரட்டி சென்ற போது அவர் படையில் மறவர்களுடன் சேர்ந்து போரிட்டு வெற்றியை , தமிழர் மானத்தைக் காத்தவர்கள் மதுரை வாழ் கள்ளர்கள், அகம்படியர்கள். எனவே முக்குலத்தோர் அநாவசியமாக தங்களுக்குள் உயர்வு தாழ்வு பார்க்க வேண்டாம். இன்றுவரை அனைத்துவகை அரசியல் ஆதிக்கத்திலுமிருந்து தங்களை காத்து வருவது தொன்மையான போர்மரபினரான முக்குலம் என்பது சரித்திர உண்மை.

முக்குலத்தோர் போர் களங்களில் இருக்கும்போது அவர்களது நிலங்களையும் விவசாயத்தையும் குடும்பங்களையும் பாதுகாத்தது பள்ளர்களும், பறையர்களும்தான். இன்றைக்கும் நமது குலதெய்வ கோயில்களில் இவர்கள் பூசாரிகளாகவும், முதன்மை மரியாதைப் பெறுபவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே அரைகுறையாக வரலாறை அறியாமல் நமக்குள் சண்டை எதற்கு? ஆங்கிலேயர்கள் காலத்தில் சாணார்கள் அரசியல் ஆதாயம் பெறவும், பின்னர் காமராஜரின் அரசியல் சூழ்ச்சியிலும் ,பின்னர் வந்த திராவிடக் கட்சிகளின் அரசியல் பாதுகாப்பிற்காகவும் முக்குலதோருக்கும் பள்ளர்கள், பறையர்களுக்கும் இடைவிடாத வேற்றுமைகளை உருவாக்கி வருகிறார்கள்.

உலகின் தொன்மையான பல civilization-களில் நடப்பதுதான் தமிழர்களுக்கும் நடந்து வருகிறது. தொடர்ந்து பல போர்கள், பல அந்நிய ஊடுருவல்கள் அரசியல் அடக்குமுறைகள் இவற்றை எல்லாம் கடந்து இன்றும் தமிழினம் வாழ்வது மிகப்பெரிய அதிசயம்தான். ஆனால் இன்றைய தமிழர்கள் மிக் மோசமாக மூளைச்சாளவை செய்யப்பட்டு உள்ளார்கள். நமது கலாச்சாரம் திராவிட இயக்கங்கள் மூலமாக முழுக்க முழுக்க dilute ஆகி செல்லுலாயிட் கலாச்சாரமாகிவிட்டது. நாயக்கர் ஆங்கிலயர்கள் காலத்தில் தமிழனுக்க் வீரம் இருந்தது இன்று வெறும் அலப்பறைகள்தான் உள்ளது.

இதிலிருந்து நாம் மீளவேண்டும் என்றால் மறைக்கப் பட்ட நமது வரலாறு, தெரிய வேண்டும். அன்னியர்களின் ஊடுருவல் எப்படி நிகழ்கிறது? நமது வசம் உள்ள நாடும், நிலமும் நம் ஆளுமையிலிருந்து எப்படி பிரிந்தது? இன்றுள்ள தமிழ்நாட்டில் தமிழர்கள் மைனாரிட்டி மெஜாரிடியா ? வாட்டல் நாகராஜன் தமிழகத்திற்கு வந்து தமிழ் கல்வி கூடாது என்று சொல்வதற்கும், அந்த கன்னட காங்கிரஸ் MLA- க்கு ஓட்டுப் போட்டது யார்?தமிழகளின் வழிகாட்டி வள்ளுவாரா,பெரியாரா? தமிழகத்தில் ஊடுறுவல் எந்த அளவு உள்ளது? தமிழகம் ஏன் குறுகி வருகிறது? தமிழர் வாழும் இடங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு வருவது எதனால்? நமது தமிழினத் துரோகிகளை எப்படி அழிக்க வேண்டும்? அவர்களுக்கு நாம் ஏன் அரசியல் அங்கிகாரமும், அதிகாரமும் தரவேண்டும்? இவர்கள் பின்னால் இருந்துக் கொண்டு நம்மை அனைத்து விதத்திலும் கேவலப் படுத்தி அழிக்கும் அடிமைகளை என்ன செய்யப் போகிறோம்? இதையெல்லாம் பற்றி அறிந்துக் கொள்ளாமல் ,அவற்றை எப்படி நிவர்த்தி செய்வது என்று யோசிப்பதை விட்டுவிட்டு நமக்குள் நாம் ஏன் அடித்துக் கொள்ள வேண்டும்? அடக்கபட வேண்டியவர்கள் யார்?

மற்றுமொரு சோகமான ,ஜீரணிக்க முடியாத விஷயம் என்னவென்றால், பல தமிழர் வரலாற்று ஏடுகள், ஆவணங்கள், ஒலைச்சுவடிகள், ஆடிப் பெருக்கு விழாவின் போது காவேரியிலும், கடலிலும்,ஆறுகளிலும் தூக்கி எறியப்பட்டு உள்ளது, பல கார்த்திகை தீபமன்று சொக்கப்பானையில் எரிக்கப்பட்டு உள்ளது, இவையெல்லாம் புத்திசாலித்தனமாக வழிபாடு முறைகளாக செய்துள்ளனர்.

நாயக்கர்கள் காலத்திலும், ஆங்கிலயர்களும் காலதிலும் தமிழினம் ஒன்றுப் பட்டு போராடியது. அன்று இனம் வாழ மாபெரும் மனிதர்கள் தங்கள் சொத்தையும் ,இன்னுயிரையும் தந்தார்கள். 1750-ளில் இருந்து பூலிதேவன், வேலு நாச்சியார், மருதுபாண்டியர்கள், அழகு முத்துக்கோன், தீரன் சின்னமலை, ,அடுத்தகட்டமாக வேலூர் சிப்பாய் கிளர்ச்சி ,குற்ற பரம்பரை சட்ட எதிர்ப்பு ,அதன் அடுத்தகட்டமாக வ.உ. சி.சிதம்பரம் பிள்ளை ,பாரதியார், அடுத்தகட்டமாக பசும்பொன் தேவர், ஜீவானந்தம், தியாகி சுந்தரலிங்கம் போன்றவர்கள் என்று உழைக்கும் வர்க்கத்தினருக்காக, சாதாரண மக்களின் சுதந்திரத்திற்காக போராடினார்கள். தமிழினம் சாதி பேதமற்று ஒன்றுப்பட்டு போராடியது. யாரை மதிக்க வேண்டுமோ அவர்களை மதித்தது.

முன்னாள் முதல்வர் காமராஜர் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், தமிழகத்தில், அரசியல் ரீதியாக சுதந்திரதிற்கு பிறகு, இன்றைய சாதி கலவரங்களுக்கு முதன்மையான காரணகர்த்தா அவர்தான். அதுமட்டுமல்ல தமிழகத்தின் நலனை பற்றி யோசிக்காமல் தனது சாதி நலனை முன்னிறுத்தி மோசமான அரசியலுக்கு வழி வகுத்தவர் என்பதும் அப்பட்டமான உண்மை . டெல்லிக்கு அடிமை அரசியல் எப்படிச் செய்வது என்பதற்கு முன்னுதாரணமும் அவரே. தமிழகத்தில், கள்ளமார்கெட், கருப்பு பணம், கலப்படம், விவசாயிகளிடம் அநியாய கமிஷன் மார்கெட்டும் உருவாக்கியதும் அவரே. தென் மாவட்டங்களில் எந்தவித வளர்ச்சி பணியும் இல்லாமல் செய்தவரும் அவரே, இத்தனை செய்தவரையும் அவரது கட்சியையும் , பத்திரிக்கைகள் ஆயிரம் புகழ்ந்தாலும் மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதற்கு முன்னுதாரமும் அவரே. இது வரலாறு. மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

பதினோராம் நூற்றாண்டில் இருந்து தமிழினம் மெல்ல மெல்ல தனது அரசியல், பொருளாதார,சமூக நிலைகளில் இருந்து கடை நிலைக்கு குறுகி வருகிறது. இந்த மாற்றம் அதே சூழ்நிலையில் வெவ்வேறு பரிணாமங்களில் இன்றளவும் தமிழகத்தில் தொடர்ந்து வருகிறது. வரலாறு என்பது ராஜராஜ சோழன் பெருமையை பேசுவதோ, முக்குலத்தவர்கள் சாதிப் பற்றோ, வெள்ளாளர்களை குற்றம் சொல்வதோ, வன்னியர்களை குறைச் சொல்வதோ அல்ல. நம் இனம் எப்படி அழிந்தது, இன்றளவும் எப்படி அழிக்கப்பட்டு வருகிறது என்பதுதான். வரலாறுகளின் உண்மையை அறிய வேண்டும். 700 நூறு ஆண்டுகளாக திரிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட தமிழக வரலாறு இன்று தனது உண்மை சொருபத்தை கொஞ்சமே கொஞ்சமே வெளிக்காட்டுகிறது. அதனைப் அப்படியே ஏற்றுக்கொண்டு அதனை புரிந்துக் கொண்டு நம் சந்ததிகளை பாதுகாக்க வேண்டும். இனத்தை பாதுகாக்க வேண்டும்.

நாயக்கர்கள் காலத்தில், வெள்ளாளர்கள் , ஆங்கிலேயர்கள் காலத்தில் சாணர்களும், காங்கிரஸ், திராவிட கட்சிகளின் காலத்தில் பள்ளர்களும் ,பறையர்களும் சலுகைகளுக்காக,பதவிக்காக வந்தேறிகளுக்கு அடிமைப்பட்டு தமிழினத்தின் அழிவுக்கு காரணமாகி வருகிறார்கள். பின்னர் தங்கள் இனத்திலே தனிமைப்பட்டு விடுகிறார்கள். இவர்களின் அரசியல் போக்கால் அழிவது அனைவரும்தான். சிறுபான்மையான பிராமணர்கள் ஆள்பவர்களின் தயவுடன் தமிழகத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டார்கள். பிரமணர்களின் மிகப்பெரிய asset இந்த திராவிட கருணாநிதியும், ஜெயலலிதாவும்தான். அதனால்தான் நம் இனம் மிக வேகமாக அழிகிறது. இவர்களது அரசியல் அதிகாரத்திற்கு, இந்த திராவிட கழகங்களின் அரசியல் பலத்திற்கு தமிழினம் சாதிச் சண்டையில் அழிகிறது. முட்டாள்கள் நாம்தான்.

இனியாவது திருந்துவோமா?

வாழ்க தமிழர். வளர்க அவர்தம் வாழ்வு.

மஞ்சு கணேஷ் தேவர்

ஆதாரம் -கூகையூர் கல்வெட்டு தென்னாற்காடு. Society: India – Democracy and Development and Society. Inequality: Caste and Class by Ely Chinoy: ElyChinoyRandomHousepublication.Newyork. 1962. At the Threshold of Untouchability : Pallars and Valayars in a Tamil Village. by Robert Delie’ge : Caste Today. Edited by C.J. Fuller: SOAS Centre of South Asian Studies.Oxford India Paperbacks.1997. Caste in Contemporary India: by Andre’ Be’teille. : Recasting Tamil Society: The Politics of Caste Race in Contemporary Southern India: by Nicholas B. Dirks : Caste Today. Edited by C.J. Fuller SOAS Centre of South Asian Studies. Oxford India Paperbacks Feudatories of South India 800-1070A.D by Dr. V. Balambal, Dept of Indian History, University of Madras: Dr. V. Balambal.Feudatories of South India 800-1070A.D. Chugh Pulication. . ALL THE KINGS’ MANA. Papers on Medieval South Indian History: by Burton Stein : Burton Stein . New Era Publications.Madras.1984. A History of South India’, K. A. Nilakanta Sastri (2003).

நன்றி!
பின்வரும் இனையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.