அஃதாவது இதுகாறும் வேட்டுவர்கள் தங்கள் பிற்கால வரலாறையே கூறி வந்தோம், முற்க்கால வரலாறு என்று நோக்கினால் அனைத்துமே வேட்டுவரை பற்றித்தான் வரும். நாம் வணங்கும் கடவுள் ஓர் வேட்டுவர் தலைவன். தமிழ் குலங்கள் அனைத்தும் வணங்கும் தமிழரின் முப்பாட்டன் எனக்கூறலாம். சேர நாடு என்பது மலைகளால் சூழ்ந்த கொங்குனாடேயாகும். சேர நாட்டின் பூர்வகுடி மக்கள் வேட்டுவரேயாகும், சேர அரசிற்க்கு முன்னர் தோன்றி, நாளடைவில் சேர அரசாக விரிவடைந்த வில்லோர் அரசே, வேட்டுவர் அரசே சேர அரசு ஆகும். சேர நாட்டின் குறுனில மன்னர்களாகிய வல்வில் ஓரி கொல்லிமலையை ஆண்டான், கடிய நெடு வேட்டுவன் கோடைமலையை ஆண்டான், கண்டீரக்கோ பெரு நள்ளி ஊட்டிமலையை ஆண்டான், பிட்டன் கொற்றன் குதிரை மலையை ஆண்டான், ஆய் அண்டிரன் மற்றும் ஆய் எயினன் மலை அரசர்கள் ஆவர். மேலும் இவ்வரசர்கள் வேட்டுவர் என்று நேரிடையாகவே குறிக்கப்பட்டுள்ளனர். மேலும் சேரர்களை நேரிடையாகவே வேட்டுவன், வெற்பன் என்றும் சங்கஇலக்கியத்தில் கூறப்பெற்றுள்ளது. வில் என்பது வேட்டுவர்களுக்கே உரியது. ஆனால், இதை அறிந்தும் பொய்யை பரப்ப வேண்டும் என்று எத்தனிக்கும் சிலர் தங்களுக்கும் கொங்கு நாட்டிற்க்கும் வரலாற்றில் துளியும் சம்மந்தமற்ற வெள்ளாளர்கள் ஏதோ இவர்கள் நாட்டை ஆண்டது போலவும் வேட்டுவர்கள் வேட்டையாடித் திரிந்தார்கள் என்றும் தங்கள் வலைப்பூவில் எழுதி வருகிறார்கள். நீங்க என்ன எழுதினாலும் சேரர்கள் வேட்டுவர்கள் தான். வேட்டுவர்களே சேரர்கள். சேரன், சோழன்னு சொல்லி நீங்கள் கூறும் அத்தனை வரலாறும் பொய் என்று சந்தேகத்தை நீங்களே எற்ப்படுத்துகிறீர்கள் வெள்ளாள வரலாற்று மேதைகளே... ஆதியில் வேட்டையாடிவனே பின்னர் மன்னர் ஆயினான் என்னும் அரச உருவாக்கப் படி நிலைகளை கற்க கசடற, பின் விளம்புக...
போர் குடியில் பிறந்த . . .
வெட்ட வெட்ட தழையும் வேட்டுவ கவுண்டனே சேரன்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.