கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Friday, June 27, 2014

நாமக்கல்லில் சோழர்கால கல்வெட்டு

கீழ்க்கரை நாட்டு மேல்சேரியைச் சேர்ந்த வேட்டுவன் ஊராளிப் பிள்ளையரான இருங்கோளன், மலையிலுள்ள வேதநாயகப் பெருமாளுக்கும் கீழுள்ள சிங்கப்பெருமாளுக்கும் வேட்டம்பாடியிலிருந்த தம்முடைய குளக்கீழ் நீர்நிலத்தில் ஒரு மா அளவு நிலத்தைத் திருமடைப்பள்ளிப்புறமாகக் கொடையளித்தத் தகவலைத் தருகிறது.
குடைவரை முகப்பின் தெற்குச் சுவர் விரிவில் உள்ள கல்வெட்டு, மன்னரின் இருபத்தோராம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. ஊராளிமலை வேட்டுவரான கோயான் இருங்கோளன் கரியபெருமாளான வலங்கைமீகாமன் அவருடைய ஊரான சேந்தமங்கலத்தில் இருந்த குளக்கழனி நிலத்தில் மாகாணி அளவு நிலத்தை இரண்டு குடைவரை இறைத்திருமேனிகளின் படையல் செலவினங்களுக்காக அளித்த தகவல் இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.
இரண்டு கல்வெட்டுகளிலுமே ஊராளி மலை வேட்டுவர் என்று இருங்கோளரைக் கூறியுள்ளனர் .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.