கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Friday, July 17, 2015

Sunday, March 8, 2015

செளந்திரநாயகி அம்மன்

சவுந்திரநாயகி, தனது தவப்பயனால் ஈசனை மணந்த ஒரு மானுடப்பெண் ஆவாள். கருவூருக்கு மேற்கே அப்பிபாளையம் எனும் சிறிய கிராமம் இருந்தது. இங்கு வேட்டுவர் இனத்தை சேர்ந்த தனவந்தருக்கு வடிவுடையாள் என்ற பெண் இருந்தாள். திருமண வயது வந்ததும், பசுபதீஸ்வரரையே திருமணம் செய்ய எண்ணினாள். அதை பெற்றோரிடமும் தெரிவித்தாள். அன்று இரவு வடிவுடையாளின் பெற்றோர் கனவில் பசுபதீஸ்வரர் தோன்றினார். 

‘உமது மகளை, யாம் பங்குனி உத்திர திருவிழா ஏழாம் நாளில் திருமணம் செய்வோம். அதன் அடையாளமாக அப்பிபாளையம் முழுவதும் அன்று பூச்சொரிந்து இருக்கும்’ என்று கூறினார். இறைவன் சொல்லியபடி பங்குனி உத்திர திரு விழாவின் ஏழாம் நாள் உதயம் ஆன அன்று, அப்பிபாளயம் முழுவதும் பூ மழை பொழிந்து இருந்தது. அங்கே தியானத்தில் இருந்த வடிவுடையாளின் கழுத்தினை தெய்வீக ஒளி வீசும் மலர் மாலை அலங்கரித்து இருந்தது. அனைவரும் வடிவுடையாளை தொழுது பல்லக்கில் ஏற்றி பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கு கொண்டு வந்தனர். 

கருவறைக்குள் சென்ற வடிவுடையாள் இறைவனோடு ஐக்கியமானார் என்று தல புராணம் தெரிவிக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இன்று வரையில் பங்குனி மாதம் ஆறாம் நாள் பசுபதீஸ்வரர் அப்பிபாளையம் செல்வதும், அங்கிருந்து ஏழாம் நாள் கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கு வடிவுடையாளுடன் வருவதும் நடைபெற்று வருகிறது. இச்சையெனும் சக்தி, ஞானமெனும் தியானத்தால், கிரியை எனும் இறைசக்தியோடு ஒன்று கலப்பதே வடிவுடைநாயகியின் வரலாறு ஆகும்.

கவுண்டர் என்போர் வேட்டுவரே.. இதோ ஆதாரம்..

சாதியில்லாத பழந்தமிழர் சமுதாயம்
அமெரிக்காவில் வாழும் தமிழறிஞர் முனைவர் சுடலைமுத்து பழனியப்பன் (www.sarii.org) அவர்களின் பழந்தமிழகத்தில் சாதிகள் குறித்த கட்டுரையைப் (http://www.soas.ac.uk/research/publications/journals/ijjs/file46109.pdf).
படித்தவர் எத்தனை? கொங்கு நாட்டுக் கல்வெட்டுக்களில் ”வெள்ளாளன் மாப்புள்ளிகளில் சோழன் பறையனான  தனபாலன்”, ”வடபரிசாரநாட்டிலிருக்கும்  வெள்ளாளன் புல்லிகளில் பறையன்  பறையனான நாட்டுக்காமுண்டன்”, ”வெள்ளாளன் செய்யரில் பறையன் தென்னகோன், ” ”வடபரிசாரநாட்டு இடிகரையிலிருக்கும் வெள்ளாளன் பையரில் சடையன் நேரியான் பறையன்” போன்ற பெயர்கள் காணப்படுகின்றன. இவ்வாறு வெள்ளாளர் பெயர்களில் ஒரு பகுதியாகப் பறையன் என்ற பெயர் வருவது எதைக்காட்டுகிறது?சில ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் நடந்த தமிழகத் தொல்லியல் கழகத்தின் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட பழனியப்பனின் கட்டுரை இதற்கு ஒரு விளக்கம் அளிக்கிறது.
 கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்‘ என்ற நூல், “இடைக்காலக் கொங்கில் வேளாண்மையை வளர்த்தெடுப்பதில் சோழப்பேரரசு ஆர்வம் காட்டியது. அதனால் காடு கொன்று நாடாக்கும் பணி விரைவு படுத்தப் பெற்றது. பல புத்தூர்கள் உருவாக்கப் பெற்றன. இங்கு வாழ்ந்த பழங்குடிகள் வேளாண்மையில் ஈடுபட்டு ஓரிடத்தில் தங்கி வேளாண்மை செய்யும் (sedentary Agriculture) முறைக்கு மாறினர். இது கொங்கு நாட்டுச் சமூக வாழ்வில் ஏற்பட்ட பெருமாற்றமாகும்.” என்று கூறுகிறது. இவ் வேளாண்மை விரிவாக்கம் 9-ஆம் நூற்றாண்டின் இறுதி/10-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நிகழ்ந்திருக்கவேண்டும். இவ்வேளாண்மை விரிவாக்கத்திற்கு முன்னர் கவுண்டர் எனும் கொங்கு நாட்டு மக்கள்  பழங்குடிப் பண்பாட்டுவழி வாழ்ந்தவர்கள் என்பதை ஏறகுறைய 9-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நிகண்டான திவாகரம்
கவுண்டர் சண்டாளராகக் கருதப்பட்டனர் என்பதைக் காட்டுகின்றது. சமணத்தின் கொள்கைகளின்படி வேட்டுவ வாழ்க்கையில் ஈடுபட்டோர் உயிர்க்கொலை புரிவோர். அதனால் அவர்களைச் சமணம் சண்டாளராகக் கருதியது. கவுண்டர் என்ற சொல்லுக்கு ஊர்த்தலைவன் என்பது பொருள். அதனால் திவாகரம் இயற்றப்பட்ட காலத்தில் கொங்கு நாட்டில் ஊர்த்தலைவர்களாக வேட்டுவர் போன்ற பழங்குடிகளே இருந்திருக்கவேண்டும். ஏனெனில் வேளாண்மையில் ஈடுபட்ட வெள்ளாளர்கள் ஊர்த்தலைவர்களாக இருந்திருப்பின் திவாகரம் இவ்வாறு கூறியிருந்திராது.
வேளாண்மை விரிவாக்கம் துவங்கிய காலத்திலேயே பறையர்கள் கொங்கில் இருந்திருந்தால்தான் அவர்கள் வேளாண்மை விரிவாக்கம் நிகழும்போதே தங்கள் அடையாளத்தையும் மாற்றிக்கொள்ள முடிந்திருக்கும்.
ஏனெனில், பாண்டிநாட்டிலும் சோழநாட்டிலும் வேளாண்மை முறை விரிவடைந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே கொங்கு நாட்டில் வேளாண்மை முறை விரிவடைந்துள்ளது. அதனால் கொங்கு நாட்டில் வேளாண்மை விரிவடையும் முன்பு அங்கு வேளாளர்/வெள்ளாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்திருக்கவேண்டும். அவ்வேளாண்மை கொங்கு நாட்டில் விரிவடையும்போது தொண்டை நாட்டிலிருந்து வந்து குடியேறிய பறையர்களும் அம் முயற்சியில் பெரும் பங்கு வகித்திருக்கவேண்டும். அதனால் தொண்டை மண்டலத்திலிருந்து கொங்கில் வந்து குடியேறிய பறையர்களுக்கு ஏற்கெனவே அங்கு இருந்திருக்கக் கூடிய வெள்ளாளர்களிடமிருந்து வலுவான எதிர்ப்பு இருந்திருக்காது.  படிநிலைச் சமுதாயம் வேரூன்றியிராத காலத்தில் கொங்கு நாட்டில் குடியேறிய பறையர்களும், அங்கிருந்த ஆயர் போன்றோர் வழி வந்தோரும் வேளாண்மை வாழ்வில் முன்னேறிய நிலையில் வெள்ளாளர்கள் என்ற அடையாளத்தை அடைந்திருக்கவேண்டும். இந்த மேல் நிலையாக்கம் “கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆயினரே” என்ற கூற்றை நினைவுபடுத்துகிறது. இதைக் கொங்கு நாட்டில் பறையர்களின் முதல் குடியேற்ற அலை எனக் கருதலாம். அதே நேரம் பறையன் என்ற பெயரும் எந்த வகையிலும் குறைவாகக் கருதப்படவில்லை என்பதால்தான்  வெள்ளாளர்களின் பெயர்களின் ஒரு பகுதியாகப் பறையன்  என்ற பெயரையும் கொங்கு மக்கள் வைத்திருக்கவேண்டும். ஆனால் வேளாண்மை விரிவாகிப் பல ஆண்டுகளுக்குப் பின் கொங்கில் குடியேறிய பறையர்கள் படிநிலைக் குமுகத்தில் மேல் நிலையை அடையமுடியவில்லை.  அவர்கள் வெள்ளாளராகக் கருதப்படவில்லை.
2000 ஆண்டுகளுக்கு முன்பு மாங்குடி கிழார் எனும் புலவர் எழுதிய புறநானூற்றுப் பாடலில் வரும் வரிகளிகளிருந்து பறையன் என்பது சாதியில்லை, குடியென்று விளங்கும்.
”துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை”   — புறம். 337

தமிழர்கள் பலர் பறையனென்ற குடியிலிருந்து வந்திருக்க பெரும்வாய்ப்புள்ளது. இது தெரிந்திருந்தால் தாழ்த்தப்பட்டவர்களை நாம் அடக்கியாளுவோமா? எனவே உண்மை வரலாறு கற்பிக்கப்பட்டால் சாதி உயர்வில்லாத தமிழ்ச் சமுதாயத்தை நம்மால் கட்டுவிக்க முடியும். மேலும் பழனியப்பன் அதே கட்டுரையின் 4வது பக்கத்தில் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘சாக்கைப் பறையனார்’ குறித்து எழுதுகையில் சாக்கைப் பறையனார் போர்த் தளபதியாக இருந்துள்ளார், பல போர்வீரர்களுக்குத் தலைமைத் தாங்கியுள்ளார் என்பதும், ’ஆர்’ என்கிற விகுதியினால் அவரை விளித்திருப்பதிலிருந்து இவர் அக்காலத்தில் பெருமைக்குரியவராக வாழ்ந்திருக்கிறார் என்பதும் தெரியவருகிறது.  இவர் வடமொழியிலும் புலமைவாய்ந்தவராக இருந்திருப்பதும் அக்காலத்தில் தீண்டாமை இல்லையென்பதைக் காட்டுகிறது.  தமிழர் உண்மை வரலாறு அறிய பழனியப்பன் எழுதிய கட்டுரைகளை அனைவரும் படிக்க வேண்டும்.  எனவே நூல்கள் பல படித்து உண்மை வரலாறு அறிந்து தமிழ்ச்சமுதாயத்தை முன்னேற்ற வழிகாண்போம்.