கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Saturday, March 2, 2013

கொங்கு நாட்டு பழங்குடிகளின் தொன்மை

கொங்குநாடு எனும் போது நீலகிரி ,கோவை, ஈரோடு,நாமக்கல் ,சேலம் ஆகிய மாவட்டங்களில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருவதாக அறியப்படுகிறது. அதிலும் குறிப்பாக தொன்மை மிகுந்த பழங்குடிகள் அதாவது அவாகளின் பராம்பரியம் தொன்மையான பழக்க-வழக்கங்களை காத்து வருபவர்கள். கொங்குநாடு பழங்குடிகளின் வாழ்விடமாக அமைவதற்கு முதன்மையானதாக அதன் புவியியல் அமைவிடம் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை சந்திக்குமிடமாக கொங்குநாடு அமைந்திருக்கிறது. மேற்கு மலைத் தொடரில் உள்ள பெரும்பாலான பழங்குடிகள் கொங்கு நாட்டு பழங்குடிகள் தான் என்பதும் அறியப்பட வேண்டிய தகவல் ஆகும். மேலும், தமிழகத்தில் உள்ள 34 பழங்குடி இனங்களில் 16 பழங்குடி இனங்கள் கொங்கு நாட்டில் வாழ்வதாக உறுதிப்படுத்தப்படுகிறது. அதாவது கொங்கு நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் 6 பழங்குடி இனங்களும், கோவை மாவட்டத்தில் 4 பழங்குடி இனங்களும், ஈரோடு மாவட்டத்தில் 3 பழங்குடி இனங்களும், சேலம் மாவட்டத்தில் 2 மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 1 பழங்குடி இனம் என உறுதிப்படுத்தப்படுகிறது. பழங்குடிகள் மாவிழியர், காவிழியர் (காப்பு பகுதியை காப்பவர்கள்) பூவிழியர் (நிலத்தைபாது காப்பவர்கள்), வேட்டுவர், வேடர், குறவர் இன்னும் பல இனங்கள் பழங்குடிகளாக இருந்ததாக அறியப்படுகிறது. மேலும் சில பழங்குடி இனங்கள் சாதிக்குழுக்களாக மாறியதாக அறியப்படுகிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.