கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Monday, February 18, 2013

பழங்குடிகள்


பழங்குடிகள்

பழங்குடிகள்


பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டோ அல்லது பன்னெடுங் காலமாகவோ (10,000 ஆண்டுகளுக்கும் மேலாக), ஒரு நிலப்பகுதியில், வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும், மொழியும், நிலமும் அதைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டும் தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும், கடவுள், சமயம், மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் கொண்டிருப்பர். தனி மனித வாழ்க்கையிலும், உறவு முறைகளிலும், குமுகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், பணம் பற்றிய பொருளாதாரம் இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள், வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், பசிபிக் தீவுகள் என்று உலகில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு இனங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

நாட்டின் நகர, கிராம வாழ்விற்கு அப்பாற்பட்டவர்களாகவும், தங்கள் உரிமைகளைப் பொறுத்த விழிப்புணர்வு அற்றவர்களாகவும், அதே நேரத்தில் அரசு நிர்வாகத்திற்கோ அல்லது நகர மக்களுக்கோ எந்த தீங்கும் இழைக்காமல் வாழ்ந்து வருபவர்கள் பழங்குடியின மக்கள்.  பழங்குடியினர் என்று குறிப்பிடப்படும் இம்மக்கள் இந்திய நாட்டின் மொத்த மக்கட் தொகையில் 8 விழுக்காடு மட்டுமே இருந்தாலும், இவர்கள் அதிகமாக வாழும் 187 மாவட்டங்களில்தான் இந்திய நாட்டின் 68 விழுக்காடு வனப்பகுதி உள்ளது. தங்களின் வாழ்விடமாக, உலகமாகத் திகழும் வனப்பகுதியை அதன் வளம் குன்றாமல் காத்து வருபவர்கள் இம்மக்கள். அவர்களின் வாழ்விடமாகத் திகழ்ந்த காட்டை அழிப்பதிலும், இயற்கை வளங்களைச் சுரண்டுவதிலும் மட்டுமே இந்த இன்றைய நாகரிக சமூகம் நின்றுவிடவில்லை, அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தியது, அவர்களின் அந்தரங்க வாழ்க்கையிலும் அத்துமீறியது. இப்படி ஓரிரு வனப் பகுதிகளில் மட்டும் நடக்கவில்லை, சுதந்திர இந்தியாவின் வனப் பகுதிகள் அனைத்திலும் இந்த திட்டமிட்டச் சுரண்டல் தங்கு தடையின்றி நடந்து வந்தது. அதே நேரத்தில் பிரதமரே குறிப்பிட்டுள்ளது போல அரசுகள் தீட்டிய சமூக, பொருளாதாரத் திட்டங்கள் எதுவும் அவர்களைச் சென்றடையவில்லை. ஒரு பக்கத்தில் சமூக, பொருளாதார வாழ்விலிருந்து தனிமைப் படுத்தப்பட்டு, தங்களுடை உரிமைகளுக்கும், உடமைகளுக்கும் எவ்வித பாதுகாப்பும் அற்ற நிலையில், பாதுகாக்க வேண்டியவர்களே தொழில் நிறுவனங்களுடனும், ஊழல் அரசியல்வாதிகளுடனும் இணைந்து ஒடுக்க முற்பட்ட நிலையில், இயற்கையாக எழும் எதிர்ப்புணர்வு அவர்களை ஒரு கொள்கை ரீதியான ஆயுதப் பாதுகாப்பை ஏற்க தூண்டியது.

ஒரு முன்னேறிய மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டிலேயே, வனப் பகுதிகளும், பழங்குடியினரும் அத்துமீறல்களுக்கு ஆட்படும்போது, ஒரிசா, பீகார், சட்டீஸ்கார், ஜார்க்கண்ட் போன்ற இடங்களில் எப்படிப்பட்ட ஒடுக்கு முறை இத்தனை ஆண்டுக் காலமாக அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது என்பதையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் 427 பழங்குடிகள் உள்ளன

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.