கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Monday, February 4, 2013

தலையூர்க் காளி

தலையூர்க் காளி சிறந்த காளி பக்தன்.
காட்டை வசிப்பிடமாகக் கொண்ட வேடுவர்களின் நிலத்தை மண்ணாசை பொங்கப் பொங்க ஆக்கிரமிப்புசெய்தவர்கள்தான்  அண்ணன்மார்வேடுவர்களின் குடியிருப்பான காட்டை அழித்து நிர்மூலமாக்கிவெள்ளாமை செய்ய ஆரம்பித்ததால்காட்டில் சுதந்தரமாகத் திரிந்த அவர்களது பன்றிகளும்,விலங்குகளும் வெள்ளாமைக்காட்டில் புகுந்ததில் வியப்பென்னதலையூர்க்காளிக்கும்அண்ணன்மாருக்கும் இப்படி வந்த பகைதானே தவிற பெண் இச்சையால் வந்த பகை அல்லமேலும்தலையூர்க் காளி சிறந்த காளி பக்தன்.
அண்ணன்மார் வேடுவர்களை முற்றாக நீர்மூலமாக்கிய நிலை கண்டுகாளியிடம் போய்க்கதறிவேண்டுகிறான்.உடனே காளி பிரசன்னமாகி, ‘உன்குலம் இனி அழியாது வெட்ட வெட்டத் தழையும் உன்குலம்’ என்று வரம் கொடுக்கிறாள்ஒரு வஞ்சகனைபெண்பித்தனை கடவுள் எப்படி ஏற்றுக் கொண்டுவரம் கொடுக்கும்?அண்ணன்மார் காட்டை அழித்ததால்தான் காட்டின் தெய்வம் வெகுண்டெழுந்துஅவர்களை அடித்துப்போட்டு விட்டது.அருக்காணித்தங்காள் அழுது புலம்பி, ‘காட்டைச் சீர்திருத்திவெள்ளாமை செய்து பிழைக்கும் வெள்ளாளர்கள் தானே நாங்கள்... இதில் என்ன தவறு?’ என்று நியாயம்கேட்டாள்காட்டுத்தெய்வமும் மனமிரங்கி ‘காட்டை உண்டதால் நீங்கள் காஉண்டர் என்றஅவச்சொல்லுக்கு ஆளானீர்கள். முழுக்க காட்டை அழிக்காமல் விலங்குகளுக்கும்காட்டில் வசிக்கும்வேடர்களுக்கும் தொல்லை தராமல் வாழ்வீர்களாக...’ என்று அண்ணன்மாரைஉயிர்ப்பித்துவிட்டது.

  
இதுவரை நிறைய ஆய்வுகள் வந்து கொண்டிருந்தாலும் காத்திரமான தளத்தை நோக்கி நகரவில்லை.ஆய்வியல் அறிஞரான அமெரிக்காவைச் சேர்ந்த திருமதிபிரெண்டாபெக்சக்திக் கனல் போன்றோரின்கதைப்பிரதிகள் இவ்வாய்வு தளத்திலேயே செயல்படுகின்றனஇதுவரை அச்சு வடிவம் பெறாத மாற்றுக்கதைச் சொல்களையும்அச்சு வடிவமாக்கி ஆய்வுக்கு உட்படுத்தும்போது இந்தச் செழுமை மிக்ககதைப்பாடல்மனித மனங்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்உலக அளவிலான இலக்கியத்தளங்களில் தனது சுவடுகளைப் பதிக்கும்.
நன்றி  கீற்று   ( இணய தளத்தில்  பதிய  அனுமதி  அளித்துள்ளது   )

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.