கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Monday, February 18, 2013

சாதிகள்- முன்னுரை


சாதிகள்: முன்னுரை

சாதிகள்- முன்னுரை


வணக்கம்.
சாதிகள் வரலாறு என்ற தலைப்பை என் வலையில் இட்டதன் காரணம் சாதிகளின் பெயரைச் சொல்லி மற்றவர்களை இழிவுபடுத்தவோ அல்லது தாழ்மைப்படுத்தவோ அல்ல. உண்மையில் சாதிகள் என்றால் என்ன? அது எவ்வாறு தோன்றியது? என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கமே காரணமாகும். இன்றும் பலர் சாதிகளின் பெயர்களைச் சொல்லி சண்டையிடுவதை காண்கிறோம். இவை சரிதானா? இனி வரும் சந்ததியினரும் இதைத் தொடர வேண்டுமா?

அக்காலத்தில் சாதிகள் என்பது  நம் முன்னோரின் தொழில், வாழ்க்கை முறை, புகழ் அல்லது பட்டம் போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றை தெரியப்படுத்தும் காலக் கண்ணாடியாகத் திகழ்ந்தது. இன்று அவையே வேரூன்றி ஆலமரம் போல் அசைக்க முடியாமல் மனித சமூகத்தில் வேற்றுமையைக் காட்டும் சாதிகளாக நடமாடி வருகின்றன. இதில் உயர்ந்தவர் என்றோ தாழ்ந்தவர் என்றோ பிரித்துப் பார்ப்பதற்கு எதுவும் இல்லை. எனவே சாதிகளை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் சாதிகள் ஏற்றபட்ட காலத்தில் அவை பிறப்பை மையமாகக் கொண்டு அமையவில்லை அவர்கள் செய்யும் தொழிலைக் கொண்டே அமைந்தது. மற்றும் அவை ஒருவனுக்கோ அல்லது ஒரு சமூகத்துக்கோ நிரந்தரமாகவும் அமைந்தவை அல்ல அதாவது அவன் செய்யும் தொழில் மாறுபட்டால் அவன் சாதியும் மாறும் (அக்காலத்தில்). எடுத்துக்காட்டாக ஒருவன் முடிவெட்டும் தொழில் செய்தால் அவனை அம்பட்டன் என்பர். அவன் அத்தொழிலை விட்டு வேறு தொழிலில் ஈடுபட்டால் அதாவது பறை(ஒருவகை வாத்தியம்) அடிப்பவனாக மாறினால் அவனை ப‌றையன் என்றுதான் கூறுவர்.

ஆனால் இன்று சாதி என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. ஒருவர் என்ன தொழில் செய்தாலும் சாதி மாறாத் தன்மையுடன் திகழ்கின்றது. இது இடையில் ஏற்பட்ட மாறுதல்களே ஆகும். இவற்றை நாம் மாற்ற வேண்டும். மனிதன் தோன்றியது ஓருயிரில் இருந்துதான் என்ற கருத்தை அனைவரும் ஒத்துக்கொள்கிறோம். அப்படியிருக்க அனைவரும் ஒருவருக்கொருவர் உறவுமுறை கொண்டவராக இருக்கவே வாய்ப்புண்டு இதில் எங்கிருந்து வந்தது இந்த ஏற்றத் தாழ்வு.

ஒவ்வொரு சாதியும் எப்படி உருவாகியது, அதன் அர்த்தம் என்ன, அதன் வரலாறு என்ன என்பதை அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன் தன் சாதிதான் பெரிது என்று பேசுகிறவர்கள் கூட‌ அவர்களின் சாதியின் வரலாறு என்ன என்று அறிந்திருக்க மாட்டார். அப்படி அறிந்திருந்தால் ஏற்ற தாழ்வு பேசமாட்டார். அதனால் இங்கே சாதிகளின் வரலாறு என்ன என்பதை ஒவ்வொன்றாகக் காண்போம்.

நன்றி.
சாந்தன்.



This Article taken from the follwoing link
http://santhan.com


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.