கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Monday, February 4, 2013

பொன்னர் சங்கர் கதை சுருக்கம்


பொன்னர் சங்கர் கதை சுருக்கம்

அண்ணன்மார் சாமி கதைச் சுருக்கம் :

இக்கதை மூன்று தலை முறைகளில் தொடர்ந்து நடக்கிறது.

முதல் தலைமுறை:

தாத்தா நல்லவர், வல்லவர். கூடப்பிறந்தவர்கள் 12 பேர். வட்டம்பதியை (பொன்னிவள நாடு / நெல்லிவளநாடு) ஆண்ட குறுநில மன்னர். அதன் தலைநகர் வாங்கல். ( இது ஊரின் பெயர்.கொடுக்கல்,வாங்கல் அல்ல) குறுநில மன்னரென்றால் கோயில் கட்டாமலா? மதுக்கரை செல்லாண்டியம்மனுக்கு கோயில் கட்டி குடமுழுக்குச் செய்தார். வெள்ளாங்குளம் வெட்டினார்.மதகும் மடையும் கட்டினார். இதற்கிடையில் பவளாத்தாள் எனும் பத்தியாளின் உதவியுடன் குன்றுடையான் எனும் குழந்தையையும் பெற்றெடுத்தார் பெரியவர். பங்காளிகள் சூழ்ந்திருக்கப் பரமன்கதி அடைந்தார்.

இரண்டாம் தலைமுறை:

குன்றுடையான் கோலோச்ச வரும்போது பங்காளிகள் வில்லத்தனம் செய்கின்றனர். நண்பன் சோழன் தோட்டி உசிப்பிவிட , மாமன் மலைக் கொழுந்தன் மறுப்பையும் மீறி, அத்தை மகள் தாமரையை அவள் விருப்பத்தோடு கல்யாணம் செய்கிறான். பங்காளிக் காய்ச்சல் குரோசினுக்குக் குறையுமா? பிறக்கப்போகும் வாரிசு ஆண் என்றால் அப்போதே கொல்லவும், பெண் என்றால் பேணி வளர்க்கவும் மருத்துவச்சி மூலம் செய்த சதியை பிறக்கும் போதே முறியடித்தனர் குழந்தைகள்.

மூன்றாம் தலைமுறை:

அண்ணன் பொன்னர், தம்பி சங்கர். தங்கை அருக்காணி பிறக்கிறார்கள்.சோழன் வீரபாகுவைப் பெற்றான். வாலிபர்களானதும் பங்காளிகளைப் பழிவாங்குகிறார்கள். பயந்த எதிரிகள் தலையூர்க்காளி துணைகொண்டு இடைஞ்சல் செய்கிறார்கள். பெற்றோர் மறைவுக்குப்பின், தங்கை மனம் கோணாது வளர்க்கிறார்கள். சூழ்ச்சிகள்... சதிகள்... ஒரு போரில் மாயவர்(அதாவது கடவுள்) தலையூர்க்காளி வடிவெடுத்து அம்பு விட்டு சங்கரைக் காயப்படுத்துகிறார். அவமானம் தாங்காமல் சங்கர் அம்பு பாய்ச்சிக்கொண்டு தற்கொலை புரிய, வீரபாகு பறைமுழக்கி பொன்னரை அழைக்க, அங்கு வந்த பொன்னர், சங்கரின் மரணம் கண்டு தானும் தற்கொலை செய்கிறார். அழுதுகொண்டே வந்த தங்கை அருக்காணி படுகளத்தில் ஓமதீர்த்தம் தெளித்து உயிரெழுப்புகிறாள்.

பாசமாய் உறவாடி, பாங்காகக் கதை முடிக்க அமர நிலை அடைகின்றனர். கடைசி சீனில், பங்காளிகள் திருந்தியும், சோழ-பாண்டியர் பகை மறந்தும், அண்ணன்மார் சுவாமிக்குக் கோயில் எழுப்புகின்றனர்

This article taken from the following link

http://ponnar-sangar.blogspot.in/2009/12/blog-post_20.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.