கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Monday, February 4, 2013

கரூர் மாவட்டம்


கரூர் மாவட்டம் :

கரூர் மாவட்டம் :
கரூர் பகுதியில் உள்ள தோகைமலை , தாந்தோணி , க்ரிஷ்ணரயாபுரம் என்று பரவலாக ஆட்சி செய்த பெருமை கொண்டவர்கள் நாயக்கர்கள் , கரூர் மாவட்டம் முழுவதும் பார்த்தல் நாயக்கர் சமுக வாக்குகளே முன்னிலையில் உள்ளன . 
கரூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் :
அரவக்குறிச்சி 
கரூர் 
குளித்தலை 
கிருஷ்ணராயபுரம் ( தலித்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி )
 என்ற நான்கு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது கரூர் மாவட்டம் .

அரவக்குறிச்சி :

அரவக்குறிச்சி யூனியன், க.பரமத்தி யூனியன், கரூர் யூனியன் ஆகியவற்றை சேர்ந்த 58 பஞ்சாயத்துகளை உள்ளடக்கியுள்ளது அரவக்குறிச்சி தொகுதி.அரவக்குறிச்சி ,கரூர் யூனியனில்  நாயக்கர் சமுதாயம், அடுத்ததாக தாழ்த்தப்பட்டோர் சமுதாயம், மூன்றாவது, நான்காவது இடத்தில் வேட்டுவகவுண்டர், வெள்ளாளர் சமுதாயத்தினர் உள்ளனர். பள்ளபட்டி என்ற ஊரில் மட்டும் இசுலாமியர்கள் அதிக அளவில் உள்ளனர் .
அரவக்குறிச்சி பொறுத்தவரை நாயக்கர் சமூகத்தவர் முதல் இடத்திலும் , வெள்ளாளர்கள் இரண்டாம் இடத்திலும் , தாழ்த்தபட்டோர் மூன்றாம் இடத்திலும் உள்ளனர் . 

அரவக்குறிச்சி தொகுதியில் சாதி ரீதியாக வாக்காளர்கள் எண்ணிக்கை :


தொட்டிய நாயக்கர் /கம்பளத்தார் நாயக்கர் - 45 ,௦௦௦
கம்மவார் /வடுக நாயக்கர் ( பலிஜா , கவரை , கஜுழு நாயகர் ) - 7 ,௦௦௦
கம்பளத்து கவுண்டர் ( கன்னடம் பேசுவோர் ) - 6 ,௦௦௦ என தொகுதி மக்கள் தொகையில் ஏறக்குறைய 35 % மக்கள் தொகை கொண்டு பெரும்பான்மையாக வாழும் நாயக்கர்களுக்கு இது வரையில் ஒரு அரசியல் தலைவர்களும் சீட் கொடுக்காதது இந்த தொகுதி மக்களை கொதிபடைய செய்துள்ளது . பொதுவாக கரூர் மாவட்டம் கம்பளத்து நாயக்கர்கள் படிப்பறிவில் ஒன்றுமே இல்லாதவர்களாக இருப்பதால் வெளி உலகம் தெரியாமல் வாக்கு அழிக்கும் மக்களாகவே உள்ளனர் . தொகுதியில் பெரும்பான்மையாக இருந்த போதிலும் வெறும் ஒன்றிய தலைவர் போன்ற பொறுப்புகளில் மட்டுமே இருந்துவிட்டு எம்.எல்.எ ஆக முடியாத நிலையில் உள்ளனர் . 
தொகுதியில் இரண்டாவது நிலையில் உள்ள வெள்ளாளர்கள் ( வெள்ளாளர்கள் என்றால் வெள்ளாள கவுண்டர் , வெள்ளாள முதலியார் , சோழிய வெள்ளள்ளலரை இணைத்து தான் இரண்டாவது மக்கள் தொகை ) ஆனால் இந்த அரவக்குறிச்சி தொகுதியில்  8 முறை வெள்ளாள கவுண்டர்கள் எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகபட்சமாக எம்.எல்.ஏ.,வாகியுள்ளனர். 
இது யாரை குற்றம் சொல்லுவது என்று தெரியாமல் இருக்கின்றோம் . பெருவாரியாக வாழ்ந்தும் தொடர்ந்து வெள்ளாள கவுண்டேர்களின் தொகுதியாக இதை விடுவது இவர்களின் அறியாமையில் ஒன்றாகவே உள்ளன . 


கிருஷ்ணராயபுரம் :

கிருஷ்ணராயபுரம் தொகுதியை பொறுத்தவரை தனி தொகுதி என்பதால் நாயக்கர் சமுகம் நிற்க முடியாது , தொகுதில் மூன்றாவது இடத்திலேயே தாழ்த்தப்பட்ட இன மக்கள் உள்ளனர் . நாயக்கர் ,வேட்டுவ கவுண்டர்  , தாழ்த்தப்பட்டோர் என்ற கணக்கில் இந்த தொகுதி அமைத்துள்ளது . தொகுதியின் தற்போதைய எம்.எல் எ காமராஜர் நாயக்கர் இன மக்களின் கோரிக்கையை நல்ல நிலையில் செய்து வருகிறார் என்றும் , நாயக்கர்கள் ஆதரிக்கும் வேட்பாளர்கள் என்றும் கூறுகின்றனர் . 

கம்பளத்து நாயக்கர்கள் ( தொட்டிய நாயக்கர்கள் ) - 56 ,௦௦௦
வடுக குல நாயக்கர்கள் ( பலிஜா , கவரை நாயுடுகள் ) - 12 ,௦௦௦
வேட்டுவ கவுண்டர்கள் - 40 ,௦௦௦
தாழ்த்தபட்டோர் - 35 ,000

என்ற கணக்கில் சாதி ரீதியாக வாக்காளர்கள் உள்ளனர் . 

கரூர் தொகுதி :
கரூர் தொகுதியில் முதல் இடத்தில வெள்ளாள மக்களும் ( கவுண்டர் , முதலியார் என அனைவரையும் சேர்த்து )  , இரண்டாம் இடத்தில் நாயக்கர்களும் உள்ளனர் . மூன்றாம் இடத்தில் வேட்டுவ கவுண்டர்களும் உள்ளனர் . தாழ்த்தப்பட்ட மக்களும் கணிசமான அளவில் உள்ளனர் .

தொகுதியில் வெள்ளாள கவுண்டர்கள் - 34 ,௦௦௦
வெள்ளாள முதலியார் ( சோழிய முதலியார் , செங்குந்தர் ,அனைவரையும் உள்ளடக்கிய ) -14 ,௦௦௦
கம்பளத்து நாயக்கர்கள் / தொட்டிய நாயக்கர்கள் - 35 ,௦௦௦
வடுகர் நாயக்கர் ( பலிஜா , கவரா மரபினர் ) -12 ,௦௦௦
என்ற கணக்கில் உள்ளனர் . இதில் தொட்டிய நாயக்கர்கள் ( கம்பளத்தார்கள் ) வாழும் பல ஊர்களில் 95 % மேல் வாக்கு அழிக்கும் மக்களாக உள்ளனர் என்று ஊடகங்கள் பாராட்டி உள்ளன . வெள்ளாள கவுண்டர்கள் , முதலியார்கள் போன்றோர் படித்து பல ஊர்களுக்கு சென்று விட்டதாலும் , நாயக்கர்கள் ஊரை விட்டு எங்கும் போகாத நிலையிலும் இவர்கள் வாழும் ஊர்களில் ஆவலாக வாக்கு அழிக்கும் மக்களாக உள்ளனர் என்கிறது ஊடகங்கள் . ஆனால் யாருக்கு வாக்கு அழிகின்றோம் என்பதை அறியாமல் வாக்கு அழித்து வருகின்றனர் இந்த பகுதி மக்கள் . 
தொடர்ந்து இந்த தொகுதியை வெள்ளாள கவுண்டர்களுக்கு கொடுத்து வருவதற்கு முக்கியமான காரணம் இந்த பகுதி கம்பளத்து மக்களே . 


குளித்தலை :
குளித்தலை என்பது பழமை மாறாத தொட்டிய நாயக்கர்கள் ( கம்பளத்து நாயக்கர்கள் ) அதிகமாக வாழும் ஒரு தொகுதி , ஆனால் வறுமையின் கோர பிடியில் உள்ள , கல்வி அற்ற சமூகமாக இங்கு தான் உள்ளனர் . படித்து பட்டம் பெற்ற கம்பளதார்களை இந்த தொகுதியிலேயே எண்ணிவிடலாம் என்ற அளவுக்கு இருப்பார் , பெண்களுக்கு 20 வயதுக்குலாகவே திருமணம் செய்வதும் , அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வதும் என்ற பல கம்பலதார்களின் பழக்கத்தை விடாமல் வாழும் தொகுதி மக்கள் . தொகுதியில் இரண்டாம் இடத்தில் நாயக்கர் மக்களும் முதல் இடத்தில் முத்துராஜா( வேட்டுவ கவுண்டர்கள் )  இனத்தவர்களும் உள்ளனர் . 
பாப்பா சுந்தரம் என்றவர் தொடர்ந்து இந்த பகுதியை அ.தி.மு.க வின் கோட்டையாக மாற்றி வருகிறார் . அ .தி.மு.க வின் வாகுகள் பெரும்பாலும் கம்பளத்தார் நாயக்கர் இன மக்களிடம் இருந்தே சென்று வந்தாலும் இந்த மக்களின் வறுமை காரணம் சொல்லி நாயக்கர் இன மக்களுக்கு வாய்ப்பு அழிக்காமல் புறக்கணித்து வருகின்றனர் அரசியல் கட்சியினர் . 

தொட்டிய நாயக்கர்கள் /கம்பளத்தார்கள் - 35 ,௦௦௦
வடுகர்கள் ( பலிஜா , கவரை ) - 14 ,௦௦௦ 
என தொகுதி மக்களில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் . முத்தரைய வேட்டுவ கவுண்டர்கள் 38 ,௦௦௦ மக்கள் தொகை கொண்டுள்ளனர் , மேலும் தாழ்த்தபட்டோர் 35 ,௦௦௦ மக்கள் தொகை கொண்டுள்ளனர் , 


கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கம்பளத்தார்கள் மிகுந்த பழமை மாறாமல் , படித்தால் பாவம் என்று இன்னும் இருக்கும் நிலையிலேயே உள்ளனர் . அறியாமை பயன்படுத்தி இவர்களை வெறும் வாக்கு வந்கிகலாகவே மற்ற சமூகங்கள் நினைக்கின்றன . நாயக்கர் சமுகத்தின் கோட்டைகளில் முக்கியமான ஒன்றில் கரூர் மாவட்டமும் ஒன்றாக திகழ்கிறது . அணைத்து வெள்ளாளர்களும் சேர்த்து மக்கள் தொகை அதிகம் செய்து தொடர்ந்து இந்த மாவட்டத்தில் கொங்கு வெள்ளாளர்களின் ஆதிக்கமே உள்ளன , பெருவாரியாக மக்கள் தொகை கொண்டு இருந்தும் நாயக்கர் மக்கள் அறியாமையிலேயே உள்ளனர் . 
எப்படி தென் மாவட்டங்களில் தேவர் சமுகம் பிற சமுகத்தை விடாமல் அரசியலில் உள்ளனவோ அதே போல கொங்கு மண்டலங்களில் கொங்கு வெள்ளலார்கள் மக்கள் தொகை இல்லை என்றாலும் அரசியலில் அந்த காலம் முதல் இன்று வரை தொடர்ந்து ஆக்கரமிப்பு செய்து வருகின்றனர் . 

தற்போது படித்து வரும் இளைய தலைமுறையினர் பெருவாரியாக பல அரசியல் கட்சிகளில் சேர்ந்து வருகின்றனர் , நாயக்கர்களின் மாவட்டமாக உள்ள கரூர் 4 தொகுதிகளிலும் நாயக்கர்களையே அணைத்து கட்சிகளும் நிறுத்த வேண்டும் என்பதே இந்த மக்களின் கோரிக்கை .

இது இப்படி இருக்க கரூர் மக்களவை தேர்தலில் வேடசந்தூர் , மன்னப்பாரை தொகுதிகள் சேர்ந்து கரூர் மக்களவை தொகுதி வருவதால் இது நாயக்கர்கள் அதிகதிலும் அதிகமாக வாழும் மக்களவை தொகுதியாகவே இருக்கும் ,,, ஆனால் ஒருவர் கூட வந்தது இல்லை என்பதுவே வேதனை தரும் செயல் . 

மீண்டும் ஒரு நாயக்கர்கள் வாழும் மாவட்டத்தில் சந்திப்போம் 

This Article is taken from the following link

http://naickernaidu.blogspot.in/2012/06/blog-post_373.html

Thanks to Naikernaidu blogspot

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.