கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Monday, February 4, 2013

பொன்னர் சங்கர் கதை – ஒரு வரலாற்று சமூக ஆய்


பொன்னர் சங்கர் கதை – ஒரு வரலாற்று சமூக ஆய்வு

இந்த இணையதளத்தில் பொன்னர் சங்கர் கதையை வரலாற்று சமூக ஆய்வாக
  நடுநிலமையோடு ஆய்வு செய்து வெளியிட உள்ளோம். சமூக ஆய்வாளர்களின் கருத்துக்களையும் இந்த இணைய தளத்தில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள உள்ளோம்.
Ponnarshankarpg1.jpg
பொன்னர் சங்கர் கதையில் இரண்டு தமிழ் இனங்களான வெள்ளாளர் கொங்கு நாட்டு
 பூர்வகடிகளான வேட்டுவர் இரண்டு சாதியில் வெள்ளாளரை மட்டும் உயர்வாகவும்  வேட்டுவரை தாழ்வாகவும்,இழிவாகவும் எழுதப்பட்டிருக்கிறது
பொன்னர் சங்கர் கதை உடுக்கையடிப்பாடலாக இருந்து நாளடைவில் நூலாக வெளி வந்தது.கள்ளழகர் அம்மானை, பிச்சன் எழுதிய அண்ணமார் சாமி கதை சாதி வெறியை தூண்டும் வகையில் எழுதி இருக்கிறார்.எனவே வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் சாதி வெறியூட்டும் நூல் என்று தடை செய்யப்பட்டிருந்தது.

பின்னர் வந்தவர்கள் அப்படியே பிச்சன் எழுதியதை படி எடுத்து எழுதிவிட்டார்கள்.
 தமிழக முதல்வர் அவர்களும் இக்கதையை ஆய்வு செய்யாமல் அப்படியே பிச்சனை  ஒற்றியே பொன்னர் சங்கர் கதையை எழுதியுள்ளார். இதில் சிறிதும் உண்மையில்லை என்பதை வரலாற்று சமூக ஆய்வாளர்களின் கருத்துக்களை வெளியிட உள்ளோம்.

இக்கதையை பல வருடங்களாக ஆய்வு செய்த கரூரை சேர்ந்த சமூக வரலாற்று
 ஆய்வாளர் திரு. இல.பரணன் அவர்கள் தாம் ஆய்வு செய்த கருத்துக்களை தொகுத்து பொன்னர் சங்கர் கதை ஒரு சமூகவியல் ஆய்வு என்ற நூலை வெளியிட்டுள்ளார்.

சங்க காலத்தில் இருந்து அதற்கு முற்பட்ட காலத்தில் இருந்து வாழ்ந்து வந்தவர்கள்
 வேட்டுவர் இனம். முதன் முதலாக கவுண்டர் என்ற பட்டம் பெற்ற முதல் தமிழ் இனம் வேட்டுவர்கள்.

சிற்றரசர்களாகவும்
மன்னர்களாகவும்,பாளையகாரர் ஆகவும்பட்டக்காரர் ஆகவும்மண்றாடிகள்வள்ளல்களாகவும் வாழ்ந்த வந்த இனத்தின் மீது கொண்ட காழ்புணர்ச்சி யினால் பொய்யாக புனைந்து எழுதப்பட்ட கதை இதற்கு எந்த ஆவணமோ,கல்வெட்டுகள்செப்போடு பட்டயமோ,வரலாற்று ஆவணங்களோ கிடையாது.

நாட்டுப் பாடல்காரர்களின் வர்ணனைகளை வரலாற்று உண்மை என்று நம்பிகொண்டிருப்பவர்களுக்கு தகுந்த விளக்கம் அளிக்க சமூக ஆய்வாளர்கள் தயாரக
 உள்ளனர்.

தலையூர்காளியின் வரலாற்றை ஆராய்ந்து பொன்னர் சங்கர் கதை உண்மை வரலாற்றை
 மறைத்து புனையப்பட்ட ஒரு கற்பனையான கதை என்பதை ஆதாரபூர்வமாக வரலாற்றுச் சான்றுகளுடன் நிரூபித்துள்ளார் வரலாற்று சமூக ஆய்வாளர் திரு.இல.பரணன் அவர்கள்.
நூல் தேவைபடுவோர் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:

திரு.இல.பரணன்
சமூக வரலாற்றுச்சங்கம்
,
பெரியாரியல் கலை இலக்கிய ஆய்வு மன்றம்
,
9/349
யாசிக்கா இல்லம்,
சி.ஆ.கோயில்சாலை
,
கரூர்-639001
தொடர்புக்கு: 9443673252
ponnarshankarpg2.jpg
தலையூர்க் காளி சிறந்த காளி பக்தன்.
காட்டை வசிப்பிடமாகக் கொண்ட வேடுவர்களின் நிலத்தை மண்ணாசை பொங்கப் பொங்கஆக்கிரமிப்பு செய்தவர்கள்தான்  அண்ணன்மார்வேடுவர்களின் குடியிருப்பான காட்டைஅழித்து நிர்மூலமாக்கி வெள்ளாமை செய்ய ஆரம்பித்ததால்காட்டில் சுதந்தரமாகத் திரிந்தஅவர்களது பன்றிகளும்விலங்குகளும் வெள்ளாமைக்காட்டில் புகுந்ததில் வியப்பென்ன?தலையூர்க்காளிக்கும் அண்ணன்மாருக்கும் இப்படி வந்த பகைதானே தவிற பெண்இச்சையால் வந்த பகை அல்லமேலும் தலையூர்க் காளி சிறந்த காளி பக்தன்.
அண்ணன்மார் வேடுவர்களை முற்றாக நீர்மூலமாக்கிய நிலை கண்டுகாளியிடம்போய்க்கதறி வேண்டுகிறான்.உடனே காளி பிரசன்னமாகி, ‘உன்குலம் இனி அழியாது வெட்டவெட்டத் தழையும் உன் குலம்’ என்று வரம் கொடுக்கிறாள்ஒரு வஞ்சகனைபெண்பித்தனைகடவுள் எப்படி ஏற்றுக் கொண்டு வரம் கொடுக்கும்?அண்ணன்மார் காட்டை அழித்ததால்தான்காட்டின் தெய்வம் வெகுண்டெழுந்து அவர்களை அடித்துப்போட்டுவிட்டது.அருக்காணித்தங்காள் அழுது புலம்பி, ‘காட்டைச் சீர்திருத்தி வெள்ளாமை செய்துபிழைக்கும் வெள்ளாளர்கள் தானே நாங்கள்... இதில் என்ன தவறு?’ என்று நியாயம் கேட்டாள்.காட்டுத்தெய்வமும் மனமிரங்கி ‘காட்டை உண்டதால் நீங்கள் காஉண்டர் என்றஅவச்சொல்லுக்கு ஆளானீர்கள். முழுக்க காட்டை அழிக்காமல் விலங்குகளுக்கும்காட்டில்வசிக்கும் வேடர்களுக்கும் தொல்லை தராமல் வாழ்வீர்களாக...’ என்றுஅண்ணன்மாரைஉயிர்ப்பித்துவிட்டது.

  
இதுவரை நிறைய ஆய்வுகள் வந்து கொண்டிருந்தாலும் காத்திரமான தளத்தை நோக்கிநகரவில்லைஆய்வியல் அறிஞரான அமெரிக்காவைச் சேர்ந்த திருமதிபிரெண்டாபெக்,சக்திக் கனல் போன்றோரின் கதைப்பிரதிகள் இவ்வாய்வு தளத்திலேயே செயல்படுகின்றன.இதுவரை அச்சு வடிவம் பெறாத மாற்றுக் கதைச் சொல்களையும்அச்சு வடிவமாக்கிஆய்வுக்கு உட்படுத்தும்போது இந்தச் செழுமை மிக்க கதைப்பாடல்மனித மனங்களில்நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்உலக அளவிலான இலக்கியத் தளங்களில் தனது சுவடுகளைப்பதிக்கும்.
நன்றி  கீற்று   ( இணய தளத்தில்  பதிய  அனுமதி  அளித்துள்ளது   )

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.