அண்ணமார் சாமி கதையில் வீரப்பூர் போர்க்களத்தில் நடந்து என்ன?
வீரப்பூர் போர்களத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதையும்,போரின் முடிவையும் படைவீரர்களாகப் பணியாற்றிய முத்தரைய வீரர்களே அறிவார்கள்.அவர்கள் தெரிந்து கண்ட நிகழ்ச்சிதான் இன்றைய படுகளம் போரில் அனைவரும் தற்கொலை புரிந்து மாண்டனர். அந்த இடம் தான் படுகளம் என்று அழைக்கப்படுகிறது.பொன்னர் ,சங்கர் ,சாம்பன் ஆகியோர் இறந்த இடத்தில் நடுகள் வைத்து முத்தரைய வீரர் குடும்பங்கள் ஆண்டுக்கு ஒரு முறை வழிபாடு நடத்தி வந்தனர்.
வீரப்பூர்ப் போர் நடந்து 200 ஆண்டுகள் ஒடிவிட்டன. முத்தரைய வீரர்கள் கூறியதில் இருந்து எத்தனையோ கற்பனைகள் உடன் சேர்த்து கதைப்பாட்டு எழுதிவிட்டார்கள். இதில் வரும் நிகழ்ச்சிகள் 90% விழுக்காடு வரலாற்று சம்பந்தம் இல்லாதவை.
தலையூர்ப் படைகள் வளநாடு நோக்கி வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட வளநாட்டு படை தலையூர்ப் படையை வளநாட்டிற்க்குள் புகவிடாமல் வீரப்பூர் காட்டில் தடுத்து நிறுத்தி போர்தொடுத்தது. போரின் முடிவில் வளநாட்டு படை முழுவதும் முறியடிக்கப்பட்டது.படுகளம் பகுதியில் மேடான பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்பட்டு முன்னரே அழிந்து போன படை போக மீதியிருந்த படை வீரர்களுடன் பொன்னர் சங்கர் சுற்றி வளைக்கப்படவே தப்பி ஒடமுடியாத இட அமைப்பும், படைக்குறைவும் ஏற்படவே எதிரிகள் கையில் சிக்காமல் இருக்க மூவரும் வாளால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது தான் உண்மை. வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தும் இதுவே.
படுகளத்தில் இருந்து நேர் கோட்டில் பார்தாலே 20 கி.மீட்டர் அப்பால் வரும் படையின் தூசி, வேல்கள் மின்னுவதை வைத்து படைகள் வரும் திசை , தொலைவு ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட்டு விடலாம். இதை அடிப்படையாக வைத்துத்தான் வளநாட்டுப்படைத் தலைமை இந்த மேடான பகுதியில் படையை நிறுத்திக்கொண்டு தலையூர் படைக்காக காத்திருந்தது. தலையூர்ப்படைக்கும், வளநாட்டுப் படை நின்ற இன்றைய கூவனாம் பள்ளத்திற்கு அருகே போர் மூண்டது.இந்த போர் பற்றி எந்த குறிப்புக்களோ, கல்வெட்டோ,செப்பேடு பட்டயமோ இல்லை. எந்த ஆவணங்களும் இல்லை.
இந்த போர் நடந்து முடிந்து ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு பின்னர் எதை வைத்து எழுதியிருக்க முடியும்.? கள்ளழகர் அம்மானையும், பிச்சனும் இதை பாரதபோர் அளவிற்கு புனைந்து எழுதிவிட்டார்கள். இதில் சிறிதும் உண்மையில்லை.
போரின் முடிவைத்தெரிந்து கொண்டு பொன்னர்,சங்கர் மனைவியர் தீயிட்டு இறந்து விடுகிறார்கள்.எஞ்சிய அருக்காணி மட்டும் பாசத்தால் அண்ணமார்களின் உடலைக்காண படுகளம் வருகிறாள். படுகளம் வந்து உடலைக்கண்டபின் முத்தரைய போர் வீரர்களின் உதவியோடு படுகளத்தில் அடக்கம் செய்யப்படுகிறார்கள். அருக்காணியும் துயரம் மிகுந்து, அழுது அழுது படுகளத்திலேயே இறந்து விடுகிறாள்.
அருக்காணியை வளநாட்டில் இருந்து அழைத்து வந்த முதல் உடல் அடக்கம் செய்தது வரை பொன்னர் சங்கர் குடும்பத்தினர் மீது ஆழ்ந்த பற்றுவைத்திருந்த முத்தரையர்களே.
இந்த போரில் வாங்கிய வரத்தின் படி அண்ணன்தான் முதலில் இறந்த்தாக கதை சொல்லியிருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ சங்கர்தான் முதலில் இறப்பதாக உண்மையைச் சொல்லிவிட்டார்கள். பொன்னர்தான் முதலில் இறந்த்தைத்தான் வரத்தின்படி கதை எழுதுவோர் சொல்லியிருக்கவேண்டும். பொன்னருக்குத்தான் முதலில் 16 வயது முடியும்.ஆனால் தம்பி சங்கர்தான் முதலில் இறப்பதாக கூறியுள்ளனர்.
இதற்கிடையே பொன்னர் தன்னந்தனியே குதிரை ஏறி கொங்கு 24 நாட்டில் உள்ள வேட்டுவரை எல்லாம் வெட்டிக்கருவறுத்ததாகவும், வந்த பின் வாளில் விழுந்து தற்கொலை செய்ததாக கூறுகின்றனர். 24 வேட்டுவரை கருவறுத்த பின்னர் பொன்னர் ஏன் தற்கொலை செய்துகொள்ளவேண்டும்.
18 நாட்டு வேட்டுவர் படையும் தலையூர் காளிதலைமையில் வீரப்பூரில் போரிட்டுக்கொண்டு இருக்கும்போது பொன்னர் எதற்காக கொங்கு நாட்டிற்கு 140 கி.மீட்டர் மேற்கு நோக்கிச்செல்லவேண்டும். படைகளை எதிர்த்து வீரப்பூரில் போரிட்டு கருவறுத்து இருக்கலாமே. 500 வருடத்திற்கு முன்னாடி கள்ளழகர் அம்மானையும், பிச்சனும் ஹாலிவுட் ரேஞ்சுக்கு கதை எழுதியிருக்கிறார்கள்.இன்றைக்கு அவர்கள் இருந்திருந்தால் ஆஸ்கார் அவார்டே வாங்கியிருப்பார்கள்.
வளநாட்டு படைக்கும், தலையூர் காளி படைக்கும் போர் நடக்க என்ன காரணம் என்று கள்ளழகர் அம்மானையிலும் இல்லை. பிச்சன் எழுதிய அண்ணமார் சாமி கதையிலும் தெளிவான காரணம் எதுவும் கூறப்படவில்லை.வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி எல்லைச்சண்டையாகத்தான் இருக்கும் என்று கூறுகிறார்கள்.
முதல்வர் கலைஞர் கருணாநிதியார் எழுதிய பொன்னர் சங்கரில் தலையூர்காளியை பொன்னர் வாளால் நெஞ்சில் தாக்கி கொல்லப்படுவதாக எழுதியிருக்கிறார். இதில் சிறிதும் உண்மையில்லை.வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லை.போரின் முடிவில் வென்றது தலையூர்காளிதான். இயற்கையான மரணம் வரும்வரை வாழ்ந்திருக்கிறார். தலையூர் காளி பரம்பரையினர் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். கலைஞர் சிலரை திருப்த்தி படுத்துவதற்காகவும், ஓட்டு பெறுவதற்காகவும் இவ்வாறு எழுதியுள்ளார்.
பொன்னர் சங்கர் திரைப்படம். பொன்னர் சங்கர் திரைப்படத்தில் தலையூர்காளி போர் களத்தில் தற்கொலை செய்து கொண்டு இறப்பதை போன்று படமாக்கப்பட்டுள்ளது. இதுவும் தவறானது.படத்தின் இறுதியில் பொன்னர் சங்கர் போரில் வென்று முத்தாயி,பவளாயியுடன் சந்தோசமாக வாழ்வது போன்று படத்தில் வருகிறது.உண்மையான கதையில் தற்கொலை செய்துகொண்டு இறந்து விடுகிறார்கள். ஆதிக்க சமுதாயத்தை சந்தோசப்படுத்தவே இவ்வாறு எடுக்கப்பட்டுள்ளது.மேலும் இது ஓட்டுச்சீட்டுக்காகவும் பயன்படும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.